Sunday, January 11, 2009

நிகழ்வுகள் - பொன்னே, பூவே, வாழ்த்துவின்

[ பொன்னே, பூவே, வாழ்த்துவின்]


வெள்ளிக்கலச 'நிற பற' நிறைய நெல்லும், மேலே வெள்ளிக்காசும் நிறைத்து ஒருபுறம்,இன்னொரு மரக்கால் நிற பற முழுக்க , அரிசியும், மேலே பூக்களும் நிரப்பி,
குடம் பால் ஒருபுறம், துளசிதீர்த்தம் மறுபுறம், நடுக்கில் கும்பம் உச்சியில் பட்டுக் கவசத்தில் அலங்கரித்து, சுற்றிலும் 9 வகை பழ வர்க்கங்கள், கஷவுப் பட்டு, ஸ்வர்ண ஆபரணங்கள், குங்குமம், மஞ்சள், பன்னீர், காசித்தீர்த்தம், ஸ்வாமிஜியின் அன்பளிப்பான கைவல்ய மாலை, உருத்ராட்சம் , அனைத்துக்கும் மேலாய் , மணக்க மணக்க வாசமிகு மல்லிகைப்பூக்களால், அனைத்து என்டெ ஈஷ்வரன்மாருக்கும் மல்லிகை மாலை, ரோஜாமாலை, செண்பகமாலை என அலங்கரித்து, முகம் பார்க்கும் கண்ணாடி ஒருபுறம், பச்சப் பசேல் என்ற காய் வர்க்கங்கள், [பூசனிக்காய், குட்டிப்பலாக்காய், ]பச்சை மரகதப்பட்டுக் குவியலில் கணபதி, என அலங்கரித்த பின்னர்,
மல்லிகைப் புஷ்பமாய்க் கணவரின் கண்களைப்பொத்தி, அழைத்து வந்து, பூஜை அறையில் நிறுத்தி, மெய்ம்மறந்து நின்ற வினாடி, ஒரு நிமிஷம் ,ஒரே ஒரு நிமிஷம், அம்பிகை கண்களைச்சிமிட்டி, பூவாய்ப் பூத்துச் சொறிந்த புன்னகையில் ,
நிலமாலையாய், விழுந்து வணங்கி, பின் கணவரையும் நமஸ்கரித்து, எழுந்த வினாடியில் புது வருசம் மங்களகரமாய் பொலிந்து வரவேற்றது.
பின் கை நீட்டம், கணவர் கையால் இன்று கை நீட்டம்[பணம்] வாங்குவது வெகு விசேஷம், மலர்ந்துபோய் கணவர் கை நீட்டம் தந்தார். [ஆனால் எதிர் பார்த்த தொகை தொகை கிட்டவில்லை]

சத்யவட்டம் [விருந்து] உண்ண அமர்ந்த நிமிஷம் ,அனைத்து என்டெ மின்தமிழ் சார்ந்த, அன்பான அருமைக்குரிய நிங்ஙள் எல்லோருக்கும் மானாசீகமாய் விருந்து படைத்துவிட்டு, வாழ்த்துகிறேன்.



இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2 comments:

  1. விஷுக் கொண்டாட்டங்ஙளுடன் ஆங்கில ஆண்டின் ஆரம்பத்தை
    விவரித்ததை வெகுவாக ரஸித்தேன் அம்மா!
    அப்பதிவு என்னை ‘வற்கலை’க்கு அழைத்துச் சென்றது.

    ‘சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’
    என்று பாடினார் ஒரு ஸித்த புருஷர்.
    அவ்வரியில் இருக்கும் சட்டுவம் அடியேன்தான்.

    உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை.
    நீங்கள் ஸாஹித்ய லக்ஷணம் கூறியதை மின் தமிழின்
    ‘அவியல்’ பகுதியில் சுட்டியுள்ளேன்.உங்கள் பார்வைக்கு
    வந்ததா ?

    தேவ்

    ReplyDelete
  2. அன்புடையீர்,
    நன்றி, நன்றி, நன்றி.
    வற்கலை, என்றால், நிறபற, கும்பம், கலசம், விஷுக்கனி அனைத்தும் அறிந்தவர்.
    மலையாள எழுத்தில் என்டெ சாஹித்ய லக்‌ஷ்ணம் பாராட்டிய நிங்ஙளுக்கு நமஸ்காரம்.
    ஒரு சாஹித்யக்காரி

    ReplyDelete