Monday, November 10, 2008

கவிதையே வா, என்டெ தமிழே வா.

கவிதையே வா, என்டெ தமிழே வா’


கசங்ஙிய கண்ணுகளில்
உதய சூர்யன் தாழோட்டு,
ஆலிங்ஙனத்திண்டெ தழுகல்
அங்ஙனெயே கிடக்குன்னு தரையில்
சந்நிரண்டெ ப்ரேமம் பூமியில்
இனியும் சூர்யன் வரும்
அக்னி காணும்
அகங்கரிக்கும்
அப்போழ் ப்ரேமம் மரிக்கும்
வீண்டும் விடரும்
மற்றொரு ராத்ரியில்.
(கு. ந}
{what is your language metaphor in poem writing?]
'ஆமாம், அது என்ன ம ப ஸ' ஒரு நாள் கூட மாலினி என்னை அப்படி கொஞ்சியதேயில்லையே? அது என்ன ம ப ஸ சூத்ரம், எங்களுக்கும் தான் சொல்லுங்களேன் என்ன வாரியர் ஞான் சொல்வது,?
என்று லிங்கப்பா கேட்க வாரியர் மலர்ந்து போய் சிரித்தார்.க்ரிஷ்ணன் குட்டி, நீலாம்பல், ராஜஷேகர், பஷீரேட்டன்,என எல்லோருமே அவளைச்சுற்றி நின்று ரசிக்க, அந்தக்கேலியில் ஒருகணம் தடுமாறிப்போனாள்.அப்பொழுதுதான் லிங்கப்பா சாரோடு நின்ற அந்த வயதான கனவான் போல் தோற்றமளித்தமனிதர் வாய் மலர்ந்தார்,
கே. கே.-----------------' ஸாரிண்டே மகளானு அல்லே"
பளிச்சென்று நிமிர்ந்தாள். 'அச்சா. அச்சா, மீண்டும் அச்சாவை அறிந்தவரா, யார், யாரிவர்?
எங்கே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்? என்று மீண்டும் லிங்கப்பா புதிர் போட, அதிகம் அவளை பரிதவிக்க விடாமல் பஷீரேட்டன் போட்டுடைத்தார். ஒருவினாடி நம்பக்கூட முடியவில்லை. "கடம்பத்தில் கே.டி. வர்மா', சத்யமானோ? கே.டி. ஸாரோ?
Silent talk in my language", எனும் அற்புதமான நூலை எழுதிய வர்மா ஸாரோ?
என்ன தவம் பண்ணினேன்? இந்த ஜென்மத்தில் இவரைக்காணமுடியுமென்று கனவுகூட கண்டிருப்பாளா? புகழ் பெற்ற மலையாள '-----------------' நாடகத்தியே கிழி கிழியென்று கிழித்தவர், நிர்தாட்சண்யமேயின்றி இலக்கியத்தை மதிப்பீடு செய்பவர். இலக்கிய உலகில் பேனாவை வெறும் சுய லாபபுகழ்ச்சிக்காகவோ,அல்லது மலிந்து வரும் வணிக

விற்பனைக்கோ இன்றும் விலை போகாதவர்,அதிகம் இலக்கிய கூட்டங்களில் கூட இவரைக்காண முடியாதாம்.குறிப்பிட்ட சில ரால் மட்டுமே இவரை அணுகக்கூடமுடியுமாம் .இவரைப்பற்றி, மூத்த தமையன் நாரயணேட்டன், நிறையக்கூறக்கேள்விப்பட்டுள்ளாள்.
ஸார், அனுக்ரஹிக்கணம்" அப்படியே நின்ற நிலையிலேயே கண்கள் பனித்திட அவரை நமஸ்கரித்தாள்.
ப்ரசங்கம் அசலாயிருன்னு" கே, கே---------ஸாரிண்டெ மகள் என்று ராஜஷேகர் கூறியபோதே ஆர்வம் அதுதான் உரையைகேட்க வந்தேன்',என்று அவர் சொல்லிமுடிக்குமுன் , தமிழிலும் வெலிய சாஹித்யக்காரியானு ஸார் என்று லிங்கப்பா இவளை சிலாகித்தது இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பேசிக்கொண்டே உனவு ஹாலுக்குள் னுழைந்தால், பஷீரேட்டனின் மனைவி கதீஜா சேச்சி,அவர்கள் மகன் மருமகளோடு அருகே வந்தார், வீட்டிற்கு அழைத்தால் வரக்கூட நேரமில்லாமல் உனக்கு நிகழ்ச்சிகள், அது தான் நாங்களே உனக்கு உணவு கொண்டு வந்திருக்கிறோம்,ஒருனேரமாவது எங்கல் உணவை உண்ணேன், பரோட்டாவும் வெஜிடபிள் குருமாவும், கதீஜா சேச்சியை நெஞ்சார அணைத்துக்கொண்டாள்.அவளால் ஏனோ அதிகம் பேசக்கூடமுடியவில்லை அறைக்குள் வந்த 10வது நிமிடம் அரங்கில் கண்ட இளைஞர்கள்(மாணவர்கள்} சிலர் அவளைக்காண வந்திருந்தனர் .பவன், சரவணன், முருகரட்ணம், வானதி, தயாளினி, ரூபன், என இலங்கைத்தமிழ் மாணவர்களோடு கோவை மணிவண்ணனும்.-

.மூன்று நாட்களாக உங்கள் உரையை தொடர்ந்து கேட்டு வருகிறோம், இன்று மாலை எங்களுக்காக தமிழில் ஒரு இலக்கியசொற்பொழிவாற்றமுடியுமா அம்மா?
அம்மா, என்ற பாசவிளி தமிழர்களுக்கே உரித்தான அன்பு விளியாயிற்றே?அதுவும் தமிழில் சொற்பொழிவா? அப்படியே கூடைபூக்களை தலையில் கொட்டினாரற்போன்ற பரவசமுண்டாயிற்று, வந்ததிலிருந்தே மலையாளம் ஆங்கிலம்

எனக்கேட்டுகேட்டு,அதுவும் theatre workshop, theatre lecture, theatre review, theatre person என அலுத்துப்போயிருந்தவளுக்கு கவிதை, சிறுகதை நாவல்,என எந்ததலைப்பாயினும் பரவாயில்லை, நீங்கள் பேசவேண்டும் , என்ற அழைப்பு.
இதே அரங்கில் 9வது மாடியில், -- துளிக்கூட பிகு பண்ணாமல் ஒப்புக்கொண்டாள்
ஆனால் ஏற்பாட்டாளரின் அனுமதி என்று இவள் சம்ஸயம் கேட்கும் போதே , மணிவண்ணன், Dr.வாரியர் எங்களின் ஆசிரியர்தான் அவரைக்கேட்டாயிற்று, என்றிட மகிழ்வோடு விடைகொடுத்தாள். தோழியர்கள் யாரிடமும் சொல்லத்தோன்றவில்லை, அவர்களில் யாருக்குமே தமிழ் தெரியாததால்,யாரையும் சிரமப்படுத்தத்தோன்றவில்லை.
ஆனால் நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடத்துக்குள் Dr. lingkappaa உட்படஅத்தனைபேருமே அறையினுள் நுழைய திகைத்துப்போனாள். எண்டெ கூட்டுகாரியுடெ தமிழ் சாஹித்யம் நாங்களும் கேட்கவேண்டாமா? என்ற வத்சலாவின் அன்பில் மற்ற தோழியரும் அவளை அன்போடு பார்க்க , கண்களால் நன்றி¢ கூறி, உரையைத்தொடங்கினாள்.

"படைப்பிலக்கியத்தில் இன்றைய பார்வை"
முதலில் கவிதையை தொட்டாள்.
' பாரதி வா, எண்டே ஆசானே வா,எண்டே ஆசிரியனே வா, மகளாய் நிண்டே மடியில் ஞானமர எண்டே தமிழே கவியே வா"
memory poems, formula poems ,ritual poems,list poems, wordplay poems, dramatic poems(இதன் தமிழாக்கம் தெரியாததால் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளேன்}
தமிழில் பாரதியின் கவிதைகளில் ஞான் சுவைத்த இன்பச்சுவையேமேற்கூறிய கவிதைக்கூறுகள்.

அக்கு வேறு ஆணிவேறாய் மெய்ம்மறந்து அவள் பேசினாள்.
கவிதையின் அழகிய metaphor என்பதே,மொழினடையே, 'visual is a language.
கவிக்கோ, ஞானகூத்தன் கலாப்ரியா, இவர்கள் எழுத்து, கவிஞர் குட்டனின்optical realityல் scientific realityயை பூடகமாககாட்டும் அழகு,
இன்குலாப், வண்ணதாசன் எனப்பலரின் கவிதை லயத்திலும் சொக்கிச்சொக்கிப்பேசிவிட்டு இறுதியாக அவளது கவிதைகளை வாசித்தபோது
-----------------
மாணவரகள் கைதட்ட, , கேள்வி பதில் நேரம் தொடங்கியது.
(தொடரும்}

No comments:

Post a Comment