Monday, November 10, 2008

கலையே, ஒரு நிமிஷம், கவனியேன்???

{மாநாட்டில் சந்தித்த மாண்புமிகு மனிதர்}
{ கலையே, ஒரு நிமிஷம், கவனியேன்??? }

மறுனாள் காலையில் யாருக்குமே யாரிடமும் பேசவோ, பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றத்துக்குகூட நேரமில்லை . அன்று அதிமுக்கிய நாள்,
டென்ஷன் என்றால் டென்ஷன், அப்படிப்பட்ட டென்ஷனிலிருந்தோம், பல்வேறுனாடுகளிலிருந்தும் அவ்வளவு அருமையாய் தெறிவு செய்யப்பட்டு மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த படைப்பாளிகளின் மதிப்பீடும், இதை வைத்துதான் இவர்கள் திறமைக்கு ஒரு அளவுகோலும் கணிக்கும் முக்கியமான நிகழ்ச்சி.
காலை 8 மணியிலிருந்து, மதியம் வரை மூச்சு விடக்கூட நேரமின்றி இவர்கள் மூளைக்கு வேலை. இவர்கள் விருதும் பெருமையும் எல்லாமே
இங்கு தான் முத்திரை பதிக்கப்படும் ,.அரங்கில் சென்றமர்ந்ததும் அடுத்த கணமே கும்மிருட்டு.
முதலில் tele film , பின்னர், short film' , பின்னர் soul எனும் நாடகம், இப்படியாக 5 படைப்புக்கள் பற்றி மதிப்பீடு எழுதவேண்டும். அறிவுஜீவிகள் சிலரின் உன்னத படைப்புக்கள், இன்னும் திரையேறாதவை, இன்னும் அரங்கேற்றம் காணாதவை,
ஆச்சு, முதல் tele film,தொடங்கியது --தொடக்கமே ஒரே கும்மிருட்டு, (ஏற்கனவே அரங்கின் கும்மிருட்டின் நடுக்கம் போதாதா?}'
ஞஞ்ஞா மிஞ்ஞா என்று ஒரே பூச்சியும் புழுவுமாக காட்சி விரியல், திடீரென்று {அய்யோ, அம்ம்மாடி,}உஸ்ஸென்று பத்தியைத்தூக்கிகொண்டு
சிங்கார நடனம் யார், யார் அம்மாடி, அம்மாடி, சர்ப்பராஜா, பாம்பு ,ஸார் பாம்பு,------ எழுதமுடியவில்லை, மீண்டும் அக்காட்சியை நினைத்துப்பார்க்ககூட -----
இப்படியே சர்ப்பம் ஆடிக்கொண்டே , மண்ணை நோண்ட மண்ணிலிருந்து வெளிப்பட்ட மண்புழு ஒன்றை சர்ப்பாராஜா முகர, ------------
ஹ்ம்ம், அடிவயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வர, ---ஜீரணிக்கவே முடியவில்லை.
(இக்கட்டுரையை ஒருவரிவிடாமல் படிக்கும் , my dear friends,(மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் இதை சுவைகெடாமல் மொழிபெயர்த்துக்கொடுத்து, பங்கேற்ற சக படைப்பாளிகளையும், தனது மாணவர்களையும் வாசிக்கச்செய்யும், dr. லிங்கப்பா ஸார், க்ஷமிக்கணம்,-ஒப்பந்தம் -- உண்மையை அப்படியே எழுதவேண்டுமென்று தானே }----
அடுத்தது, வயல் வெளியில் ஒரே காமிரா நகர்வு, அழகான இய்ற்கைக்காட்சிக்கே காசு கொடுக்கவேண்டும்,அப்படி ஒரு அழகு, அப்பொழுது ஒரு புல்லாங்குழலின் பிண்னியில், திடீரென்று தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு, பிசாசு போல் ஒரு ரூபம் ஓடிவருகிறது,
அமானுஷ்யம் -அது அழுகிறது, நெஞ்சைப்பிசையும் அழுகை, அழுதழுது பளிச்சென்று பூனைக்குட்டியின் கண்களில் போய் புகுந்து கொள்கிறது. டபாலென்று பூனைக்குட்டி, ------- அய்யோ அய்யோ,

மூன்றாவது இன்னும் பெரிய அறிவு ஜீவி படையலாக்கும்
,அவன் அவள்--- இரண்டே கதா பாத்திரங்கள், பேச்சை இல்லை, மூச்சே இல்லை,,

{பேசுவதா, பாடுவதா? சீச்சீ. அதெல்லாம் பாமர ஒன்றும் தெரியாத எழுத்தாளனின் படைப்பு அல்லவா? மூச், ஜீனியஸ்களின் புத்திலக்கிய கண்டுபிடிப்பில், இங்குபோய் அதெல்லாம் எதிர்பார்த்தால் சுத்த மெளடீகமல்லவா?}
so, ரொம்ப ஜோராய் கர்மசிரத்தியாய், கண்களை இடுக்கி மூளையை கசக்கி அப்படி என்னதான் இவர்கள் படிக்காத புது உத்தியை அந்த டைரக்டர், சொல்ல வருகிறார், என்று இவளும் கவனிக்க, --- ஹ்ம்ம், ------
அடுத்தது நான்காவது, -------, அதற்குள் அருகிலிருந்த ரெஷ்மி கொட்டாவி விட்டாள். இந்தப்பக்கம் நீலாம்பல் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்{தூங்கித்தூங்கி கவனிக்க ஆண்களுக்கு தான் என்னென்ன உத்திகள்..?
இவள் ஊஹூம் , --- மீண்டும் கவனமாய் திரையே சகலமும் என கண்களுக்கு தலை விதியை கொடுத்தாள்.
இ¢றுதியாக soul எனும் அந்த படைப்பு,
திடுக்கென நிமிர்ந்து உட்கார்ந்தாள். அடுத்த அரை மணினேரம் இமைக்கவும் மறந்துபோனாள்.எண்டெ god, எண்டெ ஈஷ்வரி,
என்ன அற்புதம் ,என்ன அற்புதம், கதையா, உஹூம்ம், கலையா,?no, no, திவ்யம் அங்கே கண்களைக்கட்டியது . மகோன்னதம் ஆங்கு
மனதை கொள்ளை கொண்டது. கதையா, சொல்லட்டுமா?
வீட்டின் கதவைத்திறந்து கொண்டு ஒரு இளம்பெண் வருகிறாள், உள்ளிருந்து கணவன் அழைக்க, இடுப்பிலிருந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு உள்ளே போகிறாள். அந்தக்கண்மணி, செல்லக்கண்ணம்மா,
மெல்ல நடந்துபோய் ஒரு ரோஜாச்செடியருகே நிற்கிறாள், பூவிண்டெ அழகு கண்மணியை கவர பறிக்க முற்பட, முள் குத்திவிடுகிரது,
கண்மணி விசும்பி அழ ரோஜா பதறிப்போகிறது. காற்றில் ஆடி தானே கீழே சாய்ந்து நிற்க, கண்மணி லாவகமாய் பறித்து கண்ணீரோடு சிரிக்கிறாள். இப்படி தினமும் குழந்தையும் ரோஜாச்செடியும் பேசிப்பழகுவதறியாத , பெற்றோர் திடீரென வேறு வீட்டுக்கு மாறிப்போக,
வாசலில் வண்டி வந்து நிறக , குழந்தை , அம்மாடி அம்மாடி, கண்ணீரைக்கட்டுப்படுத்தவேமுடியவில்லை,
குழந்தையும் ரோஜாவும் பேசிக்கொள்வதை பார்வையாளர்களாலும் கூட உள்வாங்கிக்கொள்ள வைத்த அப்படைப்பு -----
நிகழ்ச்சி முடிந்து, இவர்கள் எழுதி முடிக்க, குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்பட்டது. அனைவரும் வெளியில் வந்து மதிய உணவுக்குப்பிறகு
உடனே,
கலந்துரையாடல், மாணவர்கள், படைப்பாளிகள் ,மற்றும், அழைப்பிற்கேற்ப அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள், என முக்கியப்பட்ட வர்கள்
மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சி,
அத்தனை பேருமே சுற்றி வர அமர்ந்திருக்க முன்னிருக்கையில் அமர்ந்திருந்த dr. ஜேக்கப் எழுந்தார்,
வத்சலாவின் மதிப்பீட்டின் விளக்கம் கேட்டர், - வத்சலா கூறினார்,

Dர்.ராஜஷேகர் அடுத்து கேள்விக்கணைக்காளானவர், ஒளியூடகத்துக்கும் அரங்ககுறியீடுக்குமான அபத்தத்தை அவர் விளக்கினார்
மூன்றாவது, இவளை நோக்கி கேள்வி,----- குழந்தையும் ரோஜாவும் மட்டும் தான் கலையா?
கலை என்றால் என்ன?---வசனமும் பாடலும், என கிளு கிளுப்பும் உணர்ச்சியும் மட்டும் காட்டிவிட்டு ரசிகர்கள் பாராட்டிவிட்டார்கள் என்றோ, நீண்ட நாள் ஓட்டம் கண்டது என்றோ பல மசாலா சினமாப்படங்கள் கூட வெற்றிபெறுவதுபோலவா?

சாஹித்யம் ----Literature is thus fundamentally en expression of mind.மட்டுமல்ல, சகலமும் ஸ்தம்பித்து ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் ,நெஞ்சை அள்ளியதே,
அந்த ஒரு நிமிடம் போதாதா? கலைஞனின் வெற்றிக்கு? ஆனாலும் அந்த படைப்பிலும் பிழை யொன்றுண்டு,உடலியல் பாங்கை மெய்யசைவு நடனப்பாணியில்
சந்தங்களின் மூலம் காட்டியிருந்தால் எப்படி வென்றிருக்கும்? வெறும் நடப்பியல் பாணியில்
stylized ஒயிலாக்கமாக மட்டுமே காட்டியதில் முழுமையில் சிறு தொய்வு , ஆனாலும் அத்தனை படைப்பிலும் இதுவே சிறப்பு
என்பதற்கான மேலும் சிலகாரணங்களை எடுத்தியம்பிய மறு நிமிடமே , புயல்போல், எழுந்தாரே, Dr.லிங்கப்பா,

அது உங்கள் பாணி, இது படைப்பாளியின் . பாணி, இதைப்புரிந்து கொள்ள உங்களால் இயலவில்லை,
என்ற மறுனிமிடம்
சிலிர்த்தெழுந்தாள் .{soul நாடகத்தை கூறினால் இவருக்கென்ன கோபம்>}
சாஹித்யத்திண்டே பாஷ சங்கீர்த்தனம்மானு சாரே, இலக்கியத்தில் புரிதல் என்பது அவரவர் ஆதம திருப்தி மட்டுமல்ல,
மற்றவரின் புரிந்துணரலும் கூட, அப்பொழுதுதான் சாஹித்யத்தின் வெற்றி பூரணமாகும், ஸ்ரீ சக்ரத்திண்டே பூடகத்தில் கூட கலை உண்டே?
தென்றல் காற்றின் வருடலில் கூட மொழியுண்டே, காற்றின் தழுவலில் மோனம் பேசுவதுண்டே, விளக்கட்டுமா?

அவள் விளக்கினாள்--------
மாலை ஆறுக்கு நிகழ்ச்சி முடிந்தது, மறுனாள் இறுதினாள், இவர்களனைவருக்கும் சிறப்புனாளும் கூட.
தோழியர் அனைவரும் கவலைப்பட்டோம், மற்றவர்கள் இன்னும் ஒருவாரத்துக்கு தங்கியிருந்து பிறகே போவர்கள்,
இவள் னிகழ்ச்சி முடிந்த மறுனாளே பயணம். திடீரென்று கிட்டிய நட்பு, ஆனாலும் எப்பேர்ப்பட்ட நட்பு, பேசினோம், பேசினோம் அப்படிப்பேசினோம்,

பொழுது புலர்ந்தது, ,,,,,,,,,,
{தொடரும்}

No comments:

Post a Comment