Sunday, November 2, 2008

கொந்நப்பூ

துக்கமாக இருந்தது.மிகவும் பரிதவிப்பாக இருந்தது.

அன்னாளில் உயிரைப்பணயம் வைத்து, ஊரெல்லாம் அலைந்து திரிந்து,இறுதியில், ஏழுகடல் தாண்டி பாழும் குகைக்குள் உஸ்ஸென்று சீரும் அய்ந்துதலை நாகத்தின்கீழே,தேடிப்போன அந்த அதிசயமூலிகை,அல்லது மந்திரக்கல் இருக்குமாம், என்று சின்னவயதில் படிக்கும்போது அதன் சுவாரஸ்யம் தான் தெரிந்ததே தவிர உண்மையாகவே அனுபவித்தால் எப்படியிருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?

இல்லையென்றால் இவளைக்கேளுங்கள்.

ஹூம், பொழுதுவிடிந்தால் விஷு.தமிழர்களுக்கு புத்தாண்டுபண்டிகை, மலையாளிகளுக்கு விஷு. விஷுப்பண்டிகையின் பிரதானமே விஷுக்கனி தான். புத்தாண்டுகாலையில் எழுந்து விஷுக்கனியின் முகத்தில் விழித்தால் அந்த i ஸ்வர்யம் அடுத்த ஆண்டுவிஷுவரை நிலைக்குமாம் என்பது iதீகம்.

இவளுக்கு விஷு பிடிக்கும்.மிகவும் பிடிக்கும் விஷுக்கனிக்காகஓடிஓடி சேகரிக்கும்

விஷுப்ப்ரதானம், மணக்க மணக்க சமைக்கும் விருந்து,எல்லவற்றையும் விட கைனீட்டம், அன்றைய தினம் , கணவரிடமிருந்து கிட்டும் கைனீட்ட பணம், ரொம்ப ரொம்ப பிடிக்கும்.(பின் என்ன எப்பொழுதுமா கைனீட்டம் கொடுக்கப்போகிறார்?கிட்டும்போதெ ஒரு தொகையை கறந்திடவேண்டாமா?)

அதுவும் இந்த ஆண்டு விஷு இவர்களுக்கு விசேஷ விஷு. அண்மையில் மணம் புரிந்த மகள், அமெரிக்காவிலிருந்து கணவரோடு வந்திருந்தாள்.வீட்டில் புதிய விருந்தாளியான மாப்பிள்ளைக்கு முன்னால் சிங்கை விஷுவைக்காட்ட்டவேண்டாமா? ¢ரண்டாவது கண்மணியும் ஆஸ்திரேலியாவிலிருந்து படிப்பு முடிந்து வந்த நேரமும் கூட. மகிழ்ச்சிக்கு கேட்கவேண்டுமா?

ஒரே பூரிப்பிலும் பரவசத்திலும் விஷுக்கனிக்கான பொருட்களை சேகரிக்கத்தொடங்கியபிறகுதான் வந்தது தலைவலி.காய்வர்க்கங்களில், மஞ்சள் நிற வெள்ளரிப்பழம் மட்டும் கிட்டவில்லை. எப்படியோ தொலைபேசிமூலம் விசாரித்தரிந்து, plazzaவிற்கருகிலுள்ள ஒரு

கடையில் வாங்கி கொண்டு வந்தாயிற்று.

பழவர்க்கம்,காய்வர்க்கம், கோடி, நெல் என, எல்லாமே நிரப்பியபின்னர்தான் , (பொட்டிலறைந்தாற்போல், நிதர்சனம் கைகொட்டிச்சிரித்ததாம், என்றெல்லாம் வசனம் எழுத வரவில்லை.) ஸார், ஸார்,

எல்லாமே கிட்டியும் விஷுவுக்கு முக்கியமான கொன்னப்பூ' மட்டும் கிட்டவில்லை. இந்த சோகத்தை எங்கே போய் சொல்ல, மாளாவருத்தத்தில் தோழியர்க்கு தொலைபேசினால், அத்தனை பேருக்குமே கொன்னப்பூ கிட்டிவிட்டது.

எங்கெங்கோ போய் , அவர்கள் கொன்னப்பூவைக்கொண்டு வந்து விட்டார்கள். இவளுக்கு துக்கமான துக்கம்.சீனக்கடையிலோ, பூக்கடையிலோ,எங்குமே கொன்னப்பூ விர்கமாட்டார்கள். வழியில் காணும் மரத்தில் எங்காவது கிட்டினால் அபூர்வம்.அதுவும் தோழியர் மீராவின் வீட்டில் கோன்னமரம் உண்டு, என்பதறிந்து பல தோழியரும் அங்குபோய் வாங்கிவந்துள்லனர். இவளுக்கு அவ்வளவுதூரம் போக நேரமில்லை,ஏனெனில் , இந்த அலமலப்பில் தான் மதியம் தொலைக்காட்சியிலிருந்து இவளை பேட்டி காண வருகிறார்கள்.தொலைக்காட்சித்தயாரிப்பாளர் தொலைபேசியபோதுதான் பேட்டியின் ஞாபகமே வருகிறது.

முண்டும் நேரியலிலும், பச்சைமைசூர்சில்க்கிலும், அரக்கபரக்க உடுத்தி , நினைவில் வந்ததைப்பேசி, இரவு ஏழுமணிவரை தயாரிப்பாளருடனும், கேமராக்குழுவினருடனும், நேரம் ஓடிவிட்டது. பின்னர், இரவுவேலைகள் முடிந்து, கணவர், குழந்தைகள்,மாப்பிள்ளை, என, எல்லோரும் உறங்கப்போனார்களா, என்றால், ஊஹூம், அதுதான் இல்லை. அம்மாவின் விஷுக்கனியைக்காண, இரண்டு கண்மணிகளுமே பகீரதப்ப்ரயத்னம் செய்தும் இவள் விடவில்லை. வேறுவழியின்ரி அனைவரும் உரங்கச்சென்ரபின்னரே, பூஜை அறைக்குள், நுழைந்தாள்.தாலியில்லாகல்யாணம் போல், iயரில்லாத மந்திரம் போல் கொன்னப்பூ மட்டும் இல்லை.

பூஜாமுறிக்குல் அனைத்தையும் அடுக்கிவைத்துவிட்டு பூஜைவாதலிலேயே சிலனிமிடம் கண் அயர்ந்துபோனாள்.சரியாக 5 மணிக்கு அலாரம் அடிக்க அவசரம் அவசரமாக குளித்து , கணவரின் கண்பொத்தி எழுப்பி, பூஜை அறைக்குள் நிறுத்திய அடுத்த நிமிடம் மகள் மாப்பில்லையை, கண்பொத்தி அழைத்து வந்துவிட்டாள்.இரண்டாவது கன்மனியையும், கன்பொத்தி அழைத்துக்கொண்டுவந்து பூஜாமுறிக்குள், நிறித்தியபின்னரே,.விஷுக்கனியை ,அனைவரும் கனி கண்டனர்.

பளீரென்று துலங்கிய நிலவிளக்குகள் இருபுரம், iந்துமுகம் குத்துவிளக்குக்கு நடுவில், சுற்றிவரத்தட்டுகளில்,பழவர்க்கம்--முந்திரி,ஆப்பிள், சக்க(பலா),ஆரஞ்சு,வாட்டர்மெலன்,சிக்கு,கதலிமதுரவாழைப்பழம், இன்னொருதட்டில் பச்சைப்ப்சேலென பலாக்காய்,வெள்ளரிக்காய்,பச்சைமாங்காய்தங்கனிற வெள்ளரிக்காய்,,வாழைக்காய்ளென காய்வர்க்கம்,மனிமணிய்யய் நெல்மணிகள் ஒருதட்டில், நோட்டும் சில்லறையுமாய் பணம் ஒருதட்டில்,வீட்டிலுள்ல ச்வர்ண ஆபரனகள் ஒரு தட்டில், பூக்குவியலில்,கனகாம்பரம்,மல்லிகை,செம்பருத்தி,துலசி,ஆக்கிட்,முல்லை,பிச்சி, என எல்லாமே

நிரம்பி வழிய(ஆனாலும் கொன்னப்பூ மட்டும் இல்லை), ஸ்லோகப்புத்தம், இரும்பு நாணயங்கள் கண்ணாடி, பட்டுக்கஷவுதுணிகள், கணவருக்கு இவளே ஆசையாய் வாங்கிய

மல்கஷவு முண்டு,எனகோடித்துணிகள் நிரம்பிய தட்டு ,எனபார்த்த மாத்திரத்தில்

அப்படியே பரவசப்பட்டுப்போனார்கள் குழந்தைகள். கணவர் கூட இத்தனை நிறைவையும் பார்த்தபிறகு கொன்னப்பூவை பற்றிப்பேசவேயில்லை. அனைவரும் கற்பூர தீபம் இவள் காட்ட கண்னில் ஒற்ரிக்கொண்டனர், அடுத்த கைனீட்டம். கணவர் யாருக்கு அதிகம் கொடுத்தார் என்றறிய குழந்தைகளும் இவளும் போட்டியிட,, மூச், அந்த பரவசம்

ஸஸ்பென்ஸ், இன்னுமொரு விசேஷம், எல்லாவருடமும் இவளும் கணவரும் குழந்தைகட்கு கைனீட்டம் கொடுப்பார்கள்.ஆனாலிவ்வாண்டு, மகளும் மாப்பிள்ளையும் பெற்றொர்களாகிய இவர்களை நமஸ்கரித்தெழுந்து, பெற்ரோருக்கு கைனீட்டம் கொடுத்தார்களே, அந்த நிமிடம், அழுகை, ஆனந்தம்,,,,,,---அடடா, இப்படியே எழுதிக்கொண்டுபோனால்,

விஷயத்துக்கு வரட்டுமா,

ஆகா இந்த ஆண்டு கொன்னப்பூ இல்லாமலே விஷு கொண்டாடி, மகளும் மாப்பிள்லையும் அமெரிக்காவிற்கும், போனபிறகு இன்று காலை ஆறு மணிக்கு walking குக்கு போனாள்.

பார்க்கிலிருந்து, நடந்து, மேட்டில் வந்தபோது, அம்மாடி, அம்மாடி, எதிரே வளைந்து மூக்கில் வந்து முட்டியது , என்ன தெரியுமா,,,

விஷு தினத்தன்றி அவள் தவியாய் தவித்தபோது அவளை பரிதவிக்க வைத்த,,

ஸார், ஸார்,, ஸார் கொன்னப்பூ, கொன்னப்பூ, கொன்னப்பூ, ஸார்,

எழுதமுடியவில்லை,அப்படியே பூவைப்ப்டித்துக்கொண்டு நின்றத்துதான் நினைவில் நிற்கிறது.

No comments:

Post a Comment