Saturday, November 1, 2008

இனி, என்டெ உரை

தமிழில் ல ச ரா.வும் , தி, ஜானகிராமனும், தந்த பாதிப்பு தமிழில் ஞான் கண்ட பிரமிப்பு.
மொழியை அதன் முழு ஆளுமையோடும் அழ்கோடும் துல்லியமாகப் பயன் படுத்ததெரிந்ததாலேயே அவர்களின் தமிழ் நடையும், நயமும், உவமைகளும் மிகவும் கவர்ந்தது.தமிழில் சிறுகதை உத்தியை, முரண்பாட்டின் மொத்த உருவமாக, கையாளும் அசாத்திய துணிபு ஜெயகாந்தனுக்கே என்றாலும் கூட, என்ன அற்புதமான எழுத்து அவருடையது.
அடுத்து,அசோகமித்திரன் , இந்திரா பார்த்தசாரதி,,சுந்தர ராமசாமி, எஸ்.பொ, கந்தர்வன், நீல பத்மனாபன், இரா.முருகன், நா.கண்ணன், வண்ண நிலவன்,ராகவன் தம்பி,என தமிழில் தான் எத்தனை படைப்பாளிகள். படிக்கப்படிக்க தெவிட்டவே தெவிட்டாத படைப்பிலக்கிய ஸ்வர்க்கம் ஏனோ சொக்க வைக்கிறது. ஆனால் இந்த நிம்மதியும் நிலைக்கவில்லை, மீண்டும் தவிப்பு, அழகியல் பாணியில் சிறுகதைகளை கொண்டு செல்லமுடியுமா? என்று தவித்தபோது பிரபஞ்சனின் கதை சொல்லும் பாணி, பதினைந்து கதைகளே எழுதியுள்ள
மெளனியின் எழுத்திலுள்ள வார்த்தைகளுக்கப்பாலும் ஓருலகமுண்டு எனும் தத்துவார்த்தமான நடப்பியல் , புரிந்தபோது, ம்ம்ம், தமிழ் அமுதம் தான், அதனாலேயே தமிழில் ஞானும் எழுதுகிறேன். பிறப்பால் வளர்ப்பால் வாழ்வால் மலையாளி, என்பதால் மலையாள இலக்கியமும் எழுதுகிறேன்.

சிறுகதை, கவிதை, நாடகம், தொடர்கதைகள், அவ்வப்போது ஆய்வுக்கட்டுரைகள் , என இலக்கியத்தின் அனைத்துக்கூறுகளிலும் தவழ்ந்துள்ளேன் ஆனால் இன்னும் பசி , பசி, ஆம், வாசிக்கும் பசி தீரவேயில்லை, தேடித்தேடி புத்தகங்களை வாசிக்கிறேன், கணவர், குழந்தைகளுக்கடுத்து, ஞான் நேசிக்கும் அருந்தவம் புத்தகங்கள் மட்டுமே.
இலக்கியம் படைத்தல் என்பது என்னைப்பொறுத்தவரை, தவம், அந்த தபஸுக்காக, யாகத்திலமர்ந்தே என்டெ ஒவ்வொரு படைப்பையும் எழுதுகிறேன்.வாருங்கள்.என்டெ கமலகானம் கேட்க , என அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

அன்பே அன்புடன் கமலம்

No comments:

Post a Comment