Saturday, November 15, 2008

அம்மே நினக்கொரு கவிதை?

அம்மே நினக்கொரு கவிதை?

'அச்சன்மார் இல்லாத்த அம்மமாரே
நிங்ஙள்கு நமஸ்காரம்
அச்சன்மார் உண்டாயிட்டும் அவிவாஹிதயாய அம்ம மாரே
நிங்ஙள்கு நமஸ்காரம்,
அச்சனாரென்னே அறியாத்த அநாதக்குஞ்ஞிண்டெ
அம்மயாகிப்போய யுத்தகால அம்மமாரே நமஸ்காரம்
அவனொருமடி வேணம்போலும் தலோடிக்கான்,,,-----?'


அத்தனை பேரிடமும் கைகுலுக்கிவிட்டு இவளி¢டமும் கைகொடுத்து Dr. martin, விடை பெறும்போது dr.லிங்கப்பா திருவாய்மொழிந்தார்,
'மாலை 4 மணிக்கு வாயன இதழில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறார்கள். நீங்களும் ராஜஷேகரும் 6thfloorல் உள்ள டிஸ்கஷன்
அறைக்கு வந்து விடுங்கள்." என்றவர் இவள் பதிலையும் எதிர்பாராமல் போய்விட்டார். என்ன ப்ரகிருதி, , இவளுக்கு செளகர்யப்படுமாஎன்ற
ஒரு கேள்விகூடைல்லை. அருகில் மாலினி மட்டுமில்லையென்றால் பட்டென்று பதில் சொல்லியிருப்பாள். கோபம் கோபமாய் வந்தது.
இன்று மாலை 6 மணிக்கு இவர்களுக்கு அதி முக்கிய நாள்.இவர்களைப்பற்றிய மதிப்பீட்டை மேடையில் முழங்கும் நாள்.
இந்த 6 நாட்களும், இவர்கள் நடத்திய workshop, lectures, அதனால் கிட்டிய feedback,, அதிலிருந்து தெறிவு செய்யப்பட்ட சிறப்பாளர்கள், என சிறப்புப்பெறும் நாள், இந்த மானாட்டின் சிறப்பு வைபவமே இன்று மாலை 6 மணிக்குத்தான் தொடங்கவிருந்தது. எல்லோருமே இந்த டென்ஷனிலிருக்க, நாட்டாமை பாட்டுக்கு வந்தார், அட்டவணை கொடுத்து விட்டுப்போகிறார்.
அ¨ற்க்குள் வந்து கட்டிலில் விழுந்தால் அலுப்பில் அடுத்த கணமே கண்களை இழுத்துக்கொண்டுபோயிற்று, அரை மணினேரம் தான்,
பதட்டத்தில் அதற்குமேல் தூங்கமுடியவில்லை,
வத்சலா இவளுக்கு முன் விழித்திருந்தார்.குளித்து, புறப்பட்டு discussion ஹாலில் நுழைந்தால், வாயன இதழ் ஆசிரியர் ஸ்ரீதரமேனோன், ராஜஷேகரோடு பேசிக்கொண்டிருந்தார், Dr.லிங்கப்பா இவளை அறிமுகப்படுத்த, சுவாரஸ்யமான பேட்டி -----இவளும் dr, ராஜஷேகரும்,=
{சூர்யக்ரஹணத்தெரு விரும்பின் , பேட்டி பின்னர் எழுதப்படும்}
பேட்டி முடிந்து ஆசிரியர் ஸ்ரீதரமேனோன் செல்ல, இவர்களும் அறைக்குபோகத்திரும்ப Dr. lingkappaa, ஸ்க்ரிப்ட் ஒன்றை கையில் கொடுத்து, இப்பொழுது சொல்லுங்கள் , soul நாடகத்தில் வேறு என்னென்ன குறைகள்?என்றிட,
இவளுக்கு ஒருவினாடி பொறி கலங்கியது. அதைப்பற்றி இவருக்கு ஏன் ஞான் சொல்லவேண்டுமாம்?
'அதை soul னாடகாசிரியர், வந்து கேட்கட்டும் ஸார், ' என்று சொல்லி முடிக்கவில்லை, soul னாடகாசிரியரிடம் தானே பேஎசிக்கொண்டிருக்கிறீர்கள்?என்று ராஜஷேகர் சிரிக்க, அப்படியே ஸ்தம்பித்துப்போனாள்.
Dr. lingkappaa, இவரா? soul எனும் அந்த அற்புத படைப்பின் டைரக்டரா?
இவருக்கு அவ்வளவு மென்மையாக எழுதக்கூட தெரியுமா?வியப்பை அடக்கவேமுடியவில்லை.
ஸார், i am sorry, i am really soory, என இவள் உண்மையிலேயே, பரிதவிக்க,
அகில உலக அறிவுலகின் பிரதினிதி போல் , என்னை என்னவென்று நினைத்தாய்?என்பதுபோல்,
ஒருவினாடி, இவளை ஜம்பமாகப்பார்த்தாரே, ஒரு பார்வை,[அடேங்கப்பா, நாட்டாமை,க்குத்தான் என்ன பெருமை}
சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிகொண்டு, ஸ்க்ரிப்டை கையில் எடுத்தாள்.
எத்தனை ஆண்டு கோபம் , அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் "காச் மூச் கபர்தார், ' என பல
படைப்புக்களை ப்பார்த்த கோபத்தை இவள் வெடிக்க, இவளுக்கு மேல் எகிறி¢னார் வில்லன் வீரப்பா,
ராஜஷேகர் சமாதானப்படுத்த வரவில்லை. சிரித்து ரசித்தார்,
படபடவென்று வந்ததை அப்படியே வெடித்தாள்.
நவீன நாடக ஆய்வுக்காக பயிற்சிக்குப்போனபோது,
முன், பின், சேரி என்றால் என்னவென்றே தெரியாத, இவளும், சிட்னியிலிருந்து வந்த
மாளவிகாவும் அதிர்ந்துபோய் பார்த்தார்களே> எப்படி சொல்ல,
கபாலீஸ்வரர் கோயில் பக்கம் நட்டனடுவீதியில்,பறைமேளம் கொட்டி,தப்படித்து, ஜிங்ஜிங்கென்று, கூட்டத்தை அழைக்க,
ஓடிவந்தவர்கள் சேரீகுழந்தைகள்.அந்த அப்பாவிக் குழந்தைகளின் கண்களில் மின்னியது என்ன் ஆர்வம் தெரியுமா?
மூக்கொழுக நிர்வாணப்பாப்பாக்களை மடியில் வைத்துக்கொண்டு, அந்த குழந்தைகள், பெரியவர்கள்,
வீதினாடக அறிவார்த்ததை பார்க்க, எப்படி ரசிக்கிறார்கள் பார்த்தீர்களா?இவர்களிடம்தான் கலை கொட்டிக்கிடக்கிறது
என்று ஆசிரியர் , பெருமைப்பட்டுக்கொள்ள,(என்ன பேதமை}இன்றுவரை நெஞ்சில் நிற்பது , கைனீட்டிய அப்பாவிக்குழந்தைகளின்
கண்ணீர்முகமே. க்ரிஷ்ண பகவானுக்கு , மீசை முளைப்பதும் , குபீரென்று., சிறுனீர் கழித்துக்கொண்டே தடி உருவம் ஓடிவருவதும்,
ஈயென்று குரங்குபோல் முகத்தை வைத்து , அ. உ வென்று வசனம் பேசுவதும் ,ஏன் ஏன் ஸார், '
அதே தருணம், டுர்கிர அவலம், நந்தன் கதை, பாதுகாவலன், சாபம், வெறியாட்டம் போன்ர நாடகங்களில் உழைப்பையும்
மீறிய உள்ளியல்பை மறுக்க முடியவில்லை, ஆனால் வாசகனால் புரிந்துகொல்ல முடியாத தனிமனித வாதத்தை
ஒரு myth மாதிரி அருவ வடிவத்தில் கொண்டுபோவது எப்படி ஆரோக்கியமான இலக்கியம் ஆகும்'?
soul 'போன்ற ஒரு அற்புதமான படைப்புக்கு கல்யாண வசந்தமும்,சஹானாவும், பிண்னனியில் இருப்பின் நெஞ்சை அள்ளாதா?
கிடைத்தளத்தில்,ஒலிக்காட்சி,யின் ஊடகம் தானே முக்கியம்? இதையே
ஏன் இன்னும் சற்று நளினமாக எடுக்கக்கூடாது?என அவள் விளக்க, -----
{தொடரும்}

No comments:

Post a Comment