Saturday, November 15, 2008

கவிதையே நீ கடல்பக்ஷ்யானோ?

கவிதையே நீ கடல்பக்ஷ்யானோ?

கொரே திவசங்ஙளாயி
உறங்ஙிப்போய
வித்துகளிண்டெ
முகதாவில்
மண்சுமடு
காணுகயில்லா
ஹ்ருதயத்தின்டெ
ஆழத்தில் உறங்ஙிப்போய
கவித போல.
----------------------+----------------------+

{ "கவிதகுமாரி, , நீ கடல்பட்சியானோ?"}
'அம்மா` என்ற விளியில் ஒரு கணம் சிங்கையில் தானிருக்கிறோமோ, என்று மனது மயங்க, சிரமப்பட்டு கணகளைப்பிட்டுக்கொண்டு
விழித்தால், வத்சலா, தொலைபேசியை காதில் வைத்தாள்,
அருமை மகளின் காலை விளி மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, அடுத்து
கணவரிடம் பேசியபோது, "பத்திரம், பாஸ்போட், விசா, எல்லாம் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள், flight மாறும்போது கவனம், பத்திரமாக வரவேண்டும் 'என்ற அறிவுரையில் எங்கே வத்சலா இதைக்கேட்டுக்கொண்டிருப்பாரோ என்ற வெட்கம் வந்தது. நல்லவேளை, தோழி, குளிக்கப்போயிருந்தாள்.குளித்து ,பூஜித்து உணவு ஹாலில் நுழைந்தால், dr,.மாலினி ஆசையோடு கொண்டுவந்து நீட்ட, திறந்தால்,
தோசையும் , ஏதோ, தொட்டுக்கொள்ள்வும், என்னவென்று நிமிர்ந்தால், பயப்படவேண்டாம், அது சம்பல், உள்ளியும் தேங்காயும் மாத்ரமே பதமாய் வறுவல் செய்தது, எப்படி யிருக்கிறது என்று சாப்பிட்டுப்பாருங்கள். 'என dr.லிங்கப்பா,
சுவையாக இருந்தது. 'அசலாயிட்டுண்டு மாலினி, , என்றபோது, மாலினி தோசை மட்டும் தான் செய்தாள், இது எண்டெ சமையலாக்கும்; என்று லிங்கப்பா சார், கூற, நெகிழ்ந்துபோய், ,உடனே ஏதோ தோன்றியவளாய்," ஸார் நிங்ஙள் இலங்கைத்தமிழரா? என்று கேட்கப்போய், ஒருகணம் , சமயோசிதம் புத்திபுகட்ட
பட்டென்று வாயை மூடிக்கொண்டாள், ஏன் வம்பு?, ஒருமுறை பட்டது போதாதா?
மாலினிக்குட்டி அன்போடு பறிமாற, "என்ன அனீதி, தினமும் இவருக்கு மட்டும் ஸ்பெஷல்' என்று க்ரிஷ்னன்குட்டி கேலியாய் பொரும,
2 தோசயை அவருக்கும், ரெஷ்மிக்கும் பகிர்ந்துகொடுத்து, தானும் ஒன்று சாப்பிட்டு, சூடான சாய குடித்தபோது, உலகமே இன்பமாய் தோன்றியது,
yes, லண்டன் சாய சூப்பர் சாய. லண்டன் கண்மணி , i love you டா என்று பாடவேண்டும்போலிருந்தது,
9லிருந்து 10 வரை, ஓவியக்கண்காட்சி, அதுகுறித்த உரையாடல், இவர்களின் மதிப்பீடு, அருமையான ஓவியங்களை கண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. கலைஞன் எப்பவுமே கலைஞன் தான் .சந்தித்த ஒவ்வொரு ஓவியரும் தங்கள் ஓவியத்தைப்பற்றிய சரிதம்,
அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டபோது, படைப்பாளிக்கும் கலைஞனுக்கும் அதிகம் வேறுபாடில்லை என்றே தோன்றியது, 10 மணிக்குமேல் இவர்களின் அதிமுக்கிய நிகழ்ச்சி, மகிழ்ச்சியெல்லாம் conference ஹாலில் நுழையும் வரைதான். அமர்ந்திருந்தோரைக்கண்டதும் திக்கென்றாகிவிட்டது,
.அத்தனைபேருமே இலக்கிய சான்றோர்கள். நிகழ்ச்சியின் முக்கியஸ்த்ர்கள், நீதிபதிகள். ஆங்கிலேயர் பலரின் பெயர் கூட இவளுக்குத்தெரியவில்லை. இவளுக்கு அலுப்பாக இருந்தது. என்னடா வந்தோமா, போனோமா,என்றில்லாமல், வந்ததிலிருந்தே, பள்ளிக்கூட
மாணவர்கள் போல் ஒரே டென்ஷன்.
சிறப்புரைக்குப்பிறகு, உடனே படைப்பாளிகளுக்கும் நீதிபதிகளுக்குமான உரை,
முதலில் வாரியர்,,,, கவிதை என்பது, முன்னோர்களிடையே பண்டிதர்களின் கைப்பாவையாக இருந்தது.இன்று, நவயுக கவிதையில்ம் சார்ரி
யலிசக்கவிதையின் அழகை எடுத்தியம்பி, தன்னுடைய கவிதையை வாசித்தார்,
ரெஷ்மி, வடக்கே நடக்கும் முஷாயிரா பாணிக்கவிதையில் , மனம் பறிகொடுத்த அழகை விவரித்து தன்னுடைய அருமையான கவிதையை வாசித்தாள்,
வத்சலா, மரபு, யாப்பு பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, கடமனிட்ட ராமக்ரிஷ்ணனின் பாணி¢க்கு எதிராக எழுதிப்பார்க்கும் ஆசையில்
எழுதப்போய் positive thinking ல் எழுதிய அநுபவத்தை பகிர்ந்து கொண்டார்.கல்யானிக்குட்டி, நீலாம்பல் என இறுதியாக,இவள்
ம்ம்ம்ம்.
, இவள்----கடுமையான எதிர்ப்பில், உற்ரம், சுற்றம்,என சமுதாயமே எத்ர்த்தபோதிலும் ஏங்கி ஏங்கி படித்ததமிழ், ஆசையாய் படித்ததமிழ், மிகச்சிறந்த தமிழறிஞர், புலவ்ரை ஆசிரியராககொண்டு படித்த தமிழில், சாஹித்ய வாசனை எப்படி வந்தது. கண்ணம்மா, என்று கைபிடித்து அழைத்துபோன பாரதி, முளிதயிர்பிசைந்த, கவிதையில் வந்த லாவகம், அன்னாய்பத்து செய்யுளில் கண்ட அழகு,
கொட்டும் மழையில் நனைந்து மழைத்துளியை ரசித்த அனுபவம், வீட்டுக்கு வந்த துளசிச்செடியின் இதழ்கள் செழித்துவளர மென்மையாக்.
செடியின் காதோரம் பாடிய வரிகள்,
பின் தாகூரின் கவிதை கிட்டியபோது,
i grew tired of the road
when it took me here and there
i married in love
when it took me everywhere,
அன்றெல்லாம் ரசித்து மகிழ்ந்தது,ரூமி, hafiz, kabir, மீராபாய்., குட்டன் நம்பூதிரி, போன்றோரைபடித்தபோது,, ஷெல்லியும் கீட்ஸும் காணாமல் போயிருந்தார்கள் .
ஒவ்வொரு படைப்புமே ஒவ்வொரு அனுபவம்தான், மோதிரம் எனும் சிறுகதை எழுதும்போதே கண்ணீரில் காய்ச்சலே வந்து விட்டது.
கதாசிரியர்களே கனவுச்சோம்பேறிகள் என விளையாட்டுக்குகூட கமெண்ட் அடிப்பவனை சவுக்கால் வீறிடுங்கள்.
யாகம் .யெஸ், தவ்ம்தான் இலக்கியம் படைத்தல் என்பது, என்றும் இன்னும்கூட பல விஷயங்களைப்பேசி, ஒருவழியாக நிகழ்வுமுடிய ஆங்கிலேயர் இருவர் கைகுலுக்கினர். மாலினிக்குட்டி, ,தோழியர், என அனைவரும் அருகே வர,
Dr.லிங்கப்பாவும் Dr. மார்ட்டினும் அருகில் வந்தனர்.

(தொடரும்}

No comments:

Post a Comment