சிந்திக்க சில நிமிஷங்கள்,,,,,,,,
'குஞ்ஞு குட்டியாய் இருந்நப்போழ்
அம்மையுடெ முகம் கண்டு கொஞ்சிக்களிச்சப்போழ்
பம்பரம்விட்டு பாண்டி களிச்சு கச்சாயம் தின்னு
புளும்பழம் பறச்சு, ஷீலாவதியாய சுன்னரிக்கு கொடுத்து
சுமரில் கரிவாலாய் பேரும் தரவாடும் கிடன்னு விலசிச்சப்போழ்
பரிதவிச்சு ஓட்டில்புழுவாயி படிச்சு அங்கீகாரம் கிட்டி
இந்நு பாடிப்பறக்குந்ந பட்சியாய் '
{ஹலோ, ? யாரிங்கே அறிவுஜீவி? கொஞ்சம் விளக்குங்களேன்?}
நாடகமோ, சிறுகதையோ, கவிதையோ, நாவலோ, ஏன், குறும்படமாக ,இருப்பினும் கூட இலக்கியத்தின் கூறுகளில் , அதனதன் அழகோடு அந்தந்த்ந்த ப்படைப்பை கையாள்வது முக்கியம். அரசமரம், எழுதிய அய்யருக்கும், இன்றைய பொன்னீலனினெழுத்துக்கும் வேறுபாடில்லையா? கந்தர்வனின் சாசனம், எவ்வளவு அருமையான கதை? படித்துவிட்டு எவ்வளவு ஆசையோடு மலையாளத்தில் அறிமுகப்படுத்தினேன்?தகழியின் செம்மீன் வெளியுலகில் ப்ரபலம், அதுவும்கூட அது சினிமாவாக எடுக்கப்பட்டதால்,. ஆனால் அவரது,இரண்டிடங்கழி, தோட்டியுடெ மகன்,எத்தனை பேருக்குத்தெரியும்?
எம்.டி,வாசுதேவன் நாயரின் ரெண்டாம் முழம், வில்லியம் பெர்கரின் as i lay dying, மலாய்மொழியில் எண்டெ form master, Enche Tukiman, அறிமுகப்படுத்திய ஒருவரிகவிதை, இவையெல்லாம் இன்றும் என்னைப்பெரிதும் கவர்ந்தவை.
னைட் ஷியாமளனின் sixth sense, அருததிராயின் சின்னத்தெய்வங்களும் அறிந்த நீங்கள் ,அனிதா நாயரின் ladies coupe படித்திருந்தால், அனைத்து இலக்கிய ப்பார்வையில் விமர்சனப்பிழைக்கு வரமாட்டீர்கள். இலக்கிய சிருஷ்டி என்பதே லட்சியப்பிடிப்புதான்,எந்த சிருஷ்டியாயினும் அதற்கும் ஒரு தத்துவமுண்டு, கவித்துவமுண்டு, அதையும் மீறி படைப்பாளி தன் தேடலை முன் வைக்கும்ப்போது, அது அறிவுப்பூர்வமாக இருப்பதில் தப்பில்லை, ஆனால் அது மட்டும்தான் இலக்கியமா? அனாயாசமாக எந்த ப்ரக்ஞையுமின்றி, புதுமையான சில சாதனைகளை எழுத்தில் கொண்டுவருவதற்கும், அலசி, ஆராய்ந்து, சிரமப்பட்டு, சிருஷ்டியின் aesthetic theory யே இப்படித்தான் என்று எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. மாப்பாசான், செகாவ், ஓ ஹென்றி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பொன்னீலன் போன்றல்ல, ல.ச. ரா, தி ஜா, போன்ற எழுத்தாளர்களின் எழுத்தில் எந்த புதுமையோ, ஏன் தடாலடி சாகசங்களோ, புரியாத ப்ரக்ஞையில் அறிவுபூர்வம் காட்டுகிரேன் பேர்வழி, என்ற மாயைகூட இல்லை தான் ஆனால் ல. ச. ராவின், பாற்கடலுக்கீடான ஒரு சிறுகதை தமிழிலுண்டா, என சுஜாதா கேட்டதில் அப்படியே சம்மதிப்பவள் ஞான். மொழினடை என்பது , இலக்கியத்தில் மிகவும் அவசியம், இணையத்தில் ஒருமுறை எது கவிதை என்ற கேள்விக்கு, ஹரிக்ரிஷ்னன் எனும் கவிஞர் அற்புதமான ஒரு கவிதை மூலம் விளக்கம் கொடுத்திருந்தார்.எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியுமா?
சுயம்புவாக இலக்கியம் மலரவேண்டும். கனவாய், கவிதையாய், பூடகமாய், ஆனால் சுயப்ரக்ஞையோடு, சிருஷ்டி மலரும்போது அந்த நிறைவே வேறு.
soul அற்புதமான படைப்பு தான், ஆ,னால் குழந்தை முள்ளில் கிழிபட்டு, கண்ணீரோடு விடைபெற முடியாமல் தவிக்கும்போது, குழந்தையின் போஸ்ச்சர் எவ்வளவு முக்கியம்? பெற்றவள் ஓடிவரும்போது திறன் வெளியீட்டுத்னமை(efficiency} படைப்பின் தலையாய
குரியீடாயிற்றே? குறும்படமாயின் பரவாயில்லை, ஆனால் நாடகவடிவமெனில் நீங்கள் காட்டிய இழைத்த்ன்மையே தவறு. ஆங்கு சைகைகளின் உருவாக்க்கதில் அல்லது னாட்டையில் ரீங்காரமோ,புன்னகவராளியின் துணை விம்ம வைக்காதா?
Dr--லிங்கப்பா---வெறும் உனர்ச்சிக்குமிழில் இலக்கியம் படைப்பது அப்பட்டமான சினிமாட்டிக் உத்தி, அதை என் போன்றோரால் ஏற்றுக்கொள்ளமுடியாது?
------------ஏன்?
கூடியாட்டம் மோஹினியாட்டம், கதகளி, போன்றவற்றில் அழகியலை ஏற்றுகொள்ளும் நீங்கள், இதை மட்டும் ஏன் சார் சினிமாவோடு ஒப்பீடு செய்கிறீர்கள்?ஒரு அனுபவத்தை அதன் முழுமைத்தேடலோடு எழுதுவதுபோலல்ல, நிகழ்வுக்களத்தை அரங்கேற்றுவது,
internal reconstruction மூலத்திலிருந்து, inverted reconstruction பாணியில் சிந்தியுங்களேன்.ஏன் இலக்கியத்தின் சகாப்தமென்று கணிக்கப்படும் நூர்ராண்டிலேயே formative நடை தானே அறிமுகமாகியுள்ளது?குலசேகர ஆழ்வாரின் காலத்தில் நம்பூதிரிகளின் நம்பியார்களின் ,அருமையான பிரிவார் நாடககலையை ஆழ்வார் எப்படி விவரிக்கிறார், என்பதை, 'கலையோடு கவிஞ்ஞ கண்ணுகளில்'. எனும் நூலில் காண்பீர்கள், மலையாள மணிப்ரவாள நடையை பாஷ, ஆய்வில், உண்னியாச்சி சரித்திரம், உண்னிசிறுதேவி சரித்திரம், உண்ணினீலி சந்தேசம் , போன்ற படைப்புக்களுக்குக்கூட, people,s poem வழி நாடகம் தானே மக்களை சென்றடைந்தது. So. சிருஷ்டிக்குப்புரிதல் மிக முக்கியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரம்பரியம் பற்றிய ப்ரக்ஞை படைப்பாளிக்கு முக்கியமில்லையா ஸார் ?
Dr. லிங்கபா கூர்ந்து கவனித்தார், பேசவில்லை, இவளுக்கு பயமாக இருந்தது, கவலையாக் இருந்தது. ஸாஎ, இன்னும் அரை மணினேரம் தான் நிகழ்ச்சிக்கு இருக்கிறது, னாங்கள் புரப்படுகிறோம், என்று இவள் புறப்பட்டபோது, O.K.
என்று விடை கொடுத்தார். வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் அறைக்கு வந்தால் யாருமே இல்லை, வத்சலா, ரெஷ்மி, கல்யானிக்குட்டி எல்லோருமே போய்விட்டிருந்தார்கள்,
முகம் மட்டும் கழுவி பெளடரும் பொட்டும் தொட்டு , ஈஷ்வரியை வணங்கி,confernce ஹாலுக்கு வந்தால் ஒரு சுடுகுஞ்சு இல்லை. நிகழ்ச்சிஹால் எங்கே என்றே தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த வில்லன் வீரப்பா, கோபம், அழுகை எல்லாமாக,
பரிதவித்துபோய் நின்றபோது இவளைப்போலவே,தேடிக்கொண்டே ராஜ ஷேகர் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கும் தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஆபத் பாந்தவனாய், ரெஷ்மி, வேகம் வேகமாய் நடந்து வந்தாள். நிகழ்ச்சி மானாடு, அடுத்த பில்டிங்கில், என்று ரெஷ்மி கூறிக்கொண்டே நடக்க, ஏனோ எதுவுமே பேசவே முடியவில்லை. அவ்வளவு படபடப்பாக இருந்தது.
{தொடரும்}
No comments:
Post a Comment