Saturday, November 15, 2008

நன்றி, நமஸ்காரம்,,----

நன்றி, நமஸ்காரம்,,----பொட்டித்தெறிக்குந்ந தீஜ்வாலையுடெ மாதுர்யம்
படக்கத்தில் அறியுன்னு
கொல்லண்டெ வீட்டில் இரும்பும்
சொவக்குன்னு கன்னிகயைப்போல
ஸ்த்ரீகள் முலமறைக்குன்னதினுமுன்பே தன்னெ
ஸ்வர்னங்னள் உண்டாயிருன்னு
குழலூதுன்ன சப்தம்கேட்டு ரோமஞ்சம் அணிஞ்ஞு
பத்தரமாற்றுப்பொன்னு
தீயென்னு பறஞ்ஞால் பொள்ளுல்லா
பக்ஷெ தீ பொள்ளும் .

{ நன்றி, நமஸ்காரம். போய் வரட்டோ? }


இவளுக்கு அடுத்து வத்சலா ஒதேல்லொ வசனம் பேசவேண்டும்,,அருமையாகாப்பேசினாள். ராஜஷேகர் ஜுலியஸ்ஸீஸராய் பேசி, ஒருனிமிடம் மெய்ம்மறக்கச்செய்தார்,னீலாம்பல் சின்னதெய்வங்கள் நாவலிலிருந்து ஒருபகுதியை கூரவேண்டும், ----etc-------- இப்படியே
அடுத்து Dr. லிங்கப்பா கெசட்டில் ஓடும் பாடலுக்கு ஆடவேண்டும். ஞான் ரெடி, ஆனால் என்னோடு அவையில் உள்ள நீங்கள் அத்தனை பேரும் ஆடவேண்டும்.அப்பத்தான் ஞான் ஆடுவேன் என்று நிபந்தனை போட, அய்யோ அய்யொ, என்று இவள் தவித்ததை யார் கவனிக்க, மணிவண்ணன் பாடலைப் போட, என்ன பாடல் தெரியுமா? அம்மாடி, அம்மாடி, அம்மாடி, தமிழ்ப்பாடல், இளையர்களின் பாடல், -- ஏய். ஆத்தா, ஆத்தோரமா வாரியா, --- ஞான் பார்த்தா பார்க்காமலே போவியா?' ஆடாவிட்டால் அடுத்தகிடுக்கிப்பிடி
அவர்களுக்காயிற்றெ என்ற வேகத்தில், அததனைபேரும் ஆட, இவளுக்கு எதிரில்
நின்ரவர் Dr.Henri, டபாலென்று கையைப்பிடித்துக்கொண்டார். comeon என்று steps வைத்து ஆங்கில பாணியில் ஆட, ஸார், ஸார், இவள் இவளும் ஆடினாளே, அம்மாடி, அம்மாடி, சிரிப்புதாங்கமுடியவில்லை,வெட்கம் தாங்கமுடியவில்லை, பாடல் நின்றபோது இவளால் யாரையுமே பார்க்கவெமுடியவில்லை, இளையர்கோஷ்டி படுஜோராய் கைதட்ட, வானதி ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள்.எப்படியோ சிரிப்பும் சந்தோஷமுமாய் விருந்து முடிந்து அறைக்கு வந்தபோது, நள்ளிரவாகிவிட்டது, மறுனாள் இவள் பயணம் என்பதால் தோழிகள் அனைவரும் இவள் அறையிலேயே தங்கிவிட தீர்மானித்தபோது, மாலினியும் இவர்களோடே வந்து தங்கிக்கொண்டாள்,பேச்சு, பேச்சு, பேசப்பேசத்தீரவேயில்லை, என்ன்மோ ஜென்மம் ஜென்மமாய் அறிந்தாற்போல் அப்ப்டியொரு அன்புப்பரிமாற்றம். பரவசம் போய் மனசெல்லாம் இனம் புரியாகவலை சூழ்ந்துகொண்டது. என்ன அன்பு இது. எப்பேர்ப்பட்ட மனிதர்கள்.
வாழ்னாளில் கண்டிராத இலக்கிய அனுபவம் தந்த மானாடு இது. என்னென்ன காழ்ழ்ப்புணர்வு, ----?15 வயதில் மாகாணத்திலேயே சிறந்த கட்டுரையாளர் விருது பெற இவளது form teacher Mr. Lim, இவளது தலைமை ஆசிரியர், Mr.Chua இவர்களோடு சென்றபோது 2ம் பரிசுபெர்ற மலேசியாவின் உச்சக்கட்ட கவிஞர் ஒருவர், பள்ளிக்கூடப்பாப்பாவுக்கு பரிசுகொடுத்து என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள், முதலில் இந்தக்கட்டுரை இவர் எழுதியதுதானா என்று நிரூபிக்கவேண்டும் என்று முழங்கியபோது அந்தச்சிறுமி எப்படித்துடித்திருப்பாள் தெரியுமா? {பின்னர் அவரே வந்து மன்னிப்புகேட்டும் கூட மனசு காயம் பட்டது காயம் தானே?} குறுந்தொகையையும் பத்துப்பாடலையும் குமுறிகுமுறி இவள் கண்ணிரோடு முழங்க, இதைவிட உங்களுக்கு விளக்கம் வேண்டுமா?தமிழுக்கு கிட்டிய தவச்செல்வி இந்தப்பெண்,' என தனக்குப்போட இருந்த மாலையை இந்தச்சிறுமிக்கு அணிவித்து போற்றினாரே தமிழவேள். கோ.சாரங்கபாணி, அவர் மட்டுமா, நேசன் ஆசிரியர் முருகு சுப்ரமனியம், வானொலியின் பைரோஜினாராயணன், முரசு ஆசிரியர், திருனாவுக்கரசு அவர்கள், சிங்கை வானொலியின் அனைத்து மூத்த படைப்பாளர்கள், என அன்பான அந்த மாமனிதர்களின் ஊக்கத்தையும். இங்கு குறிப்பிடாமலிருக்கடியுமா? என்றாலும் சிறு
வயதிலிருந்தே இலக்கிய உலகில் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்த அனுபவமுண்டு. சக படைப்பாளி பரிசு பெற்றாலோ, அல்லது சிறப்புப்பெற்றாலோ, பின் அவர்கள் நம்மிடம் சகஜமாக பேசவேமாட்டார்கள். ஏன் சகபடைப்பாளியின் எழுத்தின் சிறப்பைப்பேசக்கூட மாட்டார்கள்.தமிழிலும் மலையாளத்திலும் எவ்வளவு காழ்ப்புணர்வுகளை சந்தித்துள்ளாள். ஆனால், இங்கு கண்ட அனுபவமே வேறாயுள்ளது. துளிக்கூட காழ்ப்புணர்வின்றி என்ன அன்பான னேசப்படையல். பொங்கிபொங்கி வந்தது,யோசித்து யோசித்து ஒரு முடிவெடுத்தாள். பொழுது விடியும் போது தோழிகளனைவரும் தூங்கிக்கொண்டிருக்க,
இவள் வாரியரை அழைத்து விஷயத்தைக்கூற, ஏன் உங்களுக்கு சிரமம் என்று அவர் பிகு பண்ணினாலும் Please saar, என்று இவள் கெஞ்ச, அரை மணினேரத்தில் அவர் புறப்பட்டு வந்தார், அருகிலுள்ல மார்க்கெட்டுக்குச்சென்று அனைத்துபொருட்களும் வாங்கிவந்து,
இவள் பணியைத்தொடங்க, மணிவண்ணன், வானதி, தயாளினி, ரூபன், என உதவிக்கு வர, வாரியர் வீட்டுப்பாத்திரங்களில் அருமையான
மலையாள ஓண ஊணு தயாராகியது. மின்னலாய் சுழன்று வேலைசெய்தாள்.அவியலுக்கு வெட்டச்சொன்னால் தயாளினி கூட்டனுக்கு வெட்டியதால் , அதையும் வைத்து மில்குஷ்யன் சமைத்தாள், பருப்பு, பப்படம் மோர்க்கூட்டான், அவியல், மாம்பழப்புளிசேரி, சாம்பார்,மொழுக்குபெரட்டு, தோரன், எலிசேரி, காளன், பருப்பு ப்ரதமன், என சமைத்துமுடித்து,துளி வாரியர் வீட்டு பூஜைஅறையில் வைத்து, காயத்ரி சொல்லி, சரியாக 11மணிக்குள் வேலை முடித்து, வாரியரின் மனைவி மார்கரட்டுக்கு முதல் ருஜிக்கு வாயில் கொடுத்து, வாவ்,என மார்கரட், ரசிக்க, உனவு ஹாலில் அனைவரும் கூடியபோது மணி12.
ரசித்து ரசித்து அனைவரும் உண்டபோது, நெஞ்சு பொங்கிபொங்கி அழுகை வந்தது. மாம்பழப்புளிசேரியை பழத்தை fork ஆல் குத்தி, கூட்டானை நாவால் சுழற்றி Dr. Henri உண்ட அழகை எழுத வார்த்தைகள் உண்டா? கண்ணில்நீரோடு, எலிசேரியை தொட்டுத்தொட்டுச்சாப்பிட்டு தண்ணிரை வாரிகுடித்ததா? அல்லது ப்ரதமனை கறி என்றென்ணி
சோற்றில் போட்டு , very sweet என்ற ஹென்ரியின் சுவையை எழுதவா? எல்லாவற்றுக்கும் மேலாய் அவளது அருமைத்தோழியரே, Very Very delicious என்று கட்டிக்கொண்டதை எழுதவா? Dr. lingkappaa'--- wonderful' மாலினிக்கு ரெசிப்பியை சொல்லிக்கொடுத்துவிட்டுப்போங்கள், என்றதையா? எதை எழுத, எதை விட? இவள் பச்சைத்தண்ணீர்கூட பல்லில்படவில்லை, பார்த்துப்பார்த்து நிறைவின் நெகிழ்விலேயே உக்கி உருகிப்போய் நின்றாள். ஆச்சு, ஆச்சு, சரியாக மாலை 5 மணிக்கு, அவள் புறப்பட,ரெஷ்மி, வத்சலா, கல்யானிக்குட்டி, ரூபன், தயாளினி, எனஎல்லோருமே, கட்டிகொள்ள,
அவர்களிடம் அங்கேயே விடைபெற்று, இவள் பேசவேயில்லை. வாயைதிறக்கவே பயமாக இருந்தது, கண்ணைக்கொட்டிக்கொட்டி, கண்ணிரை அமுக்கி , தலையசைப்பிலேயே, விடைபெற, 2 கார்களில் புறப்பட்டனர், புறப்பட 5 நிமிடமிருக்க Dr. லிங்கப்பா, மாலினியோடு வந்தார், so, my dear ம ப, ஸ, , கடைசிவரை ம ப ஸ சூத்ரம் என்னவென்றே சொல்லாமல் போகிறீர்களே? 'என்ற வினாடியில் சிதறிப்போனாள்
தேம்பிதேம்பி, கேவிக்கேவி, வெட்கமேயின்றி அவள் அழுதாள் , ஸார், I am sorry, என்று மட்டுமே சொல்லமுடிந்தது. No, No. tears, அழக்கூடாது, என்று,
வாரியர் பதறிக்கொண்டு தேற்ற, க்ரிஷ்ணன்குட்டி, கண்ணீ¢ரைத்துடைக்க, ராஜஷேகர், கடைசியில் எங்களையும் அழவைக்கலாமா என்றிட இவள் மேலும் தேம்பினாள், உள்ளே செல்ல ஆயத்தமாக இவள் நோக்க , you are a wonderful lady,மிக அருமையான
உவமானங்கள் , பெண்மையின் புதிய பரிமாணம் என்று கட்டுரை எழுதலாமா என்று யோசிக்கிறேன், அடுத்த மானாட்டில் அவசியம் சந்திப்போம், அழாதீர்கள், please, என்று
Dr. lingkappaa இவளை விடைகொடுக்க, திரும்பியே பாராமல் நடந்த இந்த sensitive fool' கண்ணீரை துடைக்கவில்லை, சிங்கை வந்து சேர்ந்தபோது கணவர் எலும்பெல்லாம் பொடிபொடியாவதுபோல் அணைத்து வரவேற்க, கண்மணிமகள் கட்டிக்கொண்டுகூத்த்தாட,
friends, my dear friends, இன்றும் இந்த நிமிஷமும் உங்களை நினைக்கும்போது, மனசில் தோன்றுவதெல்லாம், ஒருனிமிஷம் வணங்கட்டுமா?
{முற்றும்}


பி,கு---- இதுவரை பொறுமையாக எண்டெ கிறுக்கல்களை படித்த அனைவருக்கும். இத்தொடரை எழுதப்பணித்த முனைவர் கண்ணன் அவர்கட்கும், கணினியில் தொலைபேசியில் உதவிய,சிங்கை பழனிஏட்டன், மணியம், அன்பான எண்டெ சூர்யக்ரஹணத்தெரு, உங்கள் அனைவருக்கும் நன்றி,

2 comments:

 1. அற்புதப்பெண்(மணியே)ணே அன்பின் கமலம்!

  எழுத்தின் வசீகரமா!

  என்ன சொல்ல!(அடுத்தடுத்து ஒன்று விடாமல் படித்துவிட்டேன்.
  எழுதியவளை நினைக்கும்போது) மனதில் எழுந்த உணர்வுகளால் தளும்பிய கண்களை என்னையும் அறியாமல்(நானும்)கண்ணை கொட்டி கொட்டி அடக்கி விட்டேன்

  தொடருங்கள் இனிய கானத்தை

  அன்பான சிநேகிதி
  மீனா

  ReplyDelete
 2. அன்பார்ந்த மீனா,---
  ”மானாட்டில் சந்தித்த மாண்புமிகு ”கட்டுரை பலரையும் கவர்ந்ததாக வந்த கடிதங்களில்,
  வலையில் எழுதி, என்னை மகிழ்வித்த தோழியர் நிங்ஙள் மாத்திரமே.
  கண்ணைக்கொட்டிக் கொட்டிக் கண்ணீரை---
  அதெல்லாம் வேண்டாம் ஞான் தான் உணர்ச்சிப்பிழம்பு, நிங்ஙளுமா?
  அன்புடன் மட்டுமே கமலம்

  ReplyDelete