Saturday, November 15, 2008

காதோடு தான் ஞான் பாடுவேன்,-----

காதோடு தான் ஞான் பாடுவேன்,-----


சுகம் , சுகமானோ இனியும் பழைய மேல்விலாசத்தினு கத்தயக்கண்டா
பழையதொக்க கழிஞ்ஞு போயிந்நு ஷிவாயி பரயுந்நு
எந்து செய்யும் ஸ்ரீராமஜெயம் எழுதுன்னதுபோல தூலிக தொட்டாலே
பழைய மேல்விலாசம் சுயம் வன்னு நில்குன்னு பழைய மேல்விலாசம் வன்னு நில்கும்போழொக்கெ புத்தன் மேல்விலாசத்தில் நில்குன்னு ஞான்
பூம்பாற்றயோடு சோதிக்கணம் கூடுவிட்டு வன்னும் கூட்டிண்டெ ஓர்மையில்லாத
எங்ஙினெ ஜீவிக்குமென்னு?
----------------------------------+---------------------------------------------
{காதோடுதான் ஞான் பாடுவேன்}
சியாமா சாஸ்திரியின் 'கனகசேதன நீ காடு' செவியில் ரீங்கரிக்க, எந்தரோ மஹானுபாவுலு வெண்சாமரம் வீச ஆங்கிலமும் மலாயும்,தமிழுமாக ஓடிவர, னாவில் வந்து விழுந்ததோ, 'எண்டெ ப்ரியப்பட்டவரே"----------என்ற விளியே,என்ன செய்ய, இவள் ஸ்வாசிக்கும் மொழியல்லவா?
சொல்லவேண்டியவற்றில் முக்கியமான ஒரு தகவலை அவள் கூறினாள்.
இவர்களின் மொழியாற்றலைப்பற்றி அப்படிப்புகழ்ந்த dr.லிங்கப்பாவின் தாய்மொழியென்ன? நிச்சயம் மலையாளம் அல்ல, ஆனால் இவர் எங்கிருந்து மலையாளம் கற்ரார்?மலையாளம் முறையாக்கக்கற்றவர்கள் கூட பேசமுடியாத அளவுக்கு,அட்சர சுத்தமான இவரது மொழியாற்றலுக்கு முன்னால் , ஒவ்வொரு மலையாளியும் தலைவணங்கவேண்டுமே. இவ்வளவு அற்புதமாக இலக்கியத்தில் சாதனை செய்துள்ள, சாதனை செய்துவரும், இவரையல்லவா கண்டு நாங்கள் ப்ரமிக்கிறோம்,, சென்னை, கேரள, டெல்லி, சிட்னி, மலேசியா, எனபல மலையாளநாடுகளில் கலந்து கொண்ட அனுபவமுண்டு. ஆனால், இந்த மானாட்டில் கவர்ந்த மிகப்பெரும் அம்சம், ஆங்கிலேயர்களும், மலையாளிகளும்,ஒன்ரிணைந்து நிகழ்ச்சி நடத்தும் அருமை, நெஞ்சைத்தொடுகிறது. மொழியை நேசிக்கும் இத்தனை அருமையான மனிதர்களை
சந்திக்க இந்த மானாட்டில் பங்குபெறும் பேறினை தந்த ஏற்பாட்டுக்குழுவுக்கு நன்றி," .என்று கூறி இவள் உரையை முடித்தபோது, அடுத்தடுத்து,இவர்கள் 7 பேருக்குமே மேடையில் சிறப்பு செய்யப்பட்டது எப்படி தெரியுமா? னீண்ட ரிப்பன்மாலையில் வட்டப்பதக்கம்
தொங்கிய டாலர் பதித்த அழகான மாலை அவர்களுக்கு கழுத்தில் அணிவித்தார்கள்,
கையில் பூச்சிமிழில் கோபுரம் போல் நீண்ட வடிவில் அவர்களுடைய போட்டோபதித்த விருது, என்ன அழகு தெரியுமா?

அடுத்து மனாட்டின் சிறப்பான படைப்பாளரை அறிவிக்கும் கட்டம், பெண்களில் யாருமே அக்கறை காட்டவில்லை, சக படைப்பாளியை பாராட்ட மனதார காத்திருந்தோம், இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதுதான் ஆச்சர்யமாக இருந்தது, முதலில் எதிர்பார்த்தாற்போலவே , ஒளியூடகத்தில் Dr. ராஜஷேகரின் பட்டறை யும் அவரது சொற்பொழிவும் காண்பிக்கப்பட்டது, அனைவரும் கைதட்ட, அழகான ஒரு ஆங்கிலேயப்பெண் வந்து ராஜஷேகரை கைபிடித்து அழைத்துப்போக, அவர் மேடையில் நின்ற அடுத்த நிமிடம், அரங்கில் காண்பிக்க ப்பட்ட உருவம், my god, எண்டெ தெய்வமே, ஒருனிமிடம் உலக இயக்கமே நின்றுபோனது ரெஷ்மி, வத்சலா, கல்யானிக்குட்டி, வாவ், என்று இருக்கையிலிருந்தவாறே, பூரிப்பைக்கொட்ட, அரங்கில் காட்டப்பட்ட உருவம் யார் தெரியுமா? னம்பவேமுடியவில்லை, -- கண்ணுமஷியும், தெற்றிப்பின்னலுமாய், பட்டுக்கஷவு
முண்டும் நேரியலும் அணிந்த ------- could you explain what is love? என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்த காட்சி காண்பிக்கப்பட்டது , கைதட்டல் ஒலி, விடுவிடுவென்று ஆங்கிலேயர் ஒருவர் அருகே சிரித்துக்கொண்டேவர, எழுந்து நின்ற இவள்
வெட்கத்தாலும் பரவசத்தாலும் கையை கொடுக்க, சிரிப்பை கட்டுப்படுத்த்வேமுடியவில்லை.பின்னர் நடந்தது எல்லாமே கனவின் நினைவு.
செலுத்தப்பட்டவள்போல் மேடையேற , அன்போடு, அவளுக்கு கை குலுக்கி, ஆங்கிலேயர் விடை பெற, ராஜஷேகரின் அருகே சென்று நின்ற்போது, மேடையில் கரகோஷத்தில் வெட்கம், மகிழ்ச்சி, கரைபுரண்டோடியது.

Dr. Henri, . Prof. ஜேக்கப், கடம்பத்தில் வர்மா, மூவரும் பரிசளிக்க மேடையேறினார்கள்,
Dr. ஹென்றி, ராஜஷேகரை அணைத்து, கைகுலுக்கி, விருதை அளிக்க, வர்மாஜியும், prof. ஜேக்கப்பும் ராஜஷேகரை கைகுலிக்கினார்கள், அடுத்து ,இவள் , சபையை நமஸ்கரித்தாள். அருகே சென்றபோதோ வர்மாஜி, இவளுக்கு விருதளிக்க நின்ற காட்சியில்
மகிழ்ச்சியில் உலகமே ரம்யமாகிப்போனது. இதைவிடப்பேறு உண்டோ?70 வயது கடந்த அந்த இலக்கிய சான்றோர் வர்மாஜி,---- இவர் கையால் விருதா? சாஷ்டாங்கமாய் வர்மா ஸாரை நமஸ்கரித்தபோது அழுகை வந்தது, தலை தொட்டு ஆசீர்வதித்து, அவள் கையில் விருதை கொடுத்து, ஆஸம்சகள், என வாழ்த்தினார்,மற்ரவர்களும் வாழ்த்த புகைப்படங்கள் சரமாரியாய் எடுக்கப்பட்டன,வீடியோ ஒளியில் கண்கூசகூச படம் பிடிக்கப்பட்டார்கள்.
வர்மாசாரோடு இடமும் வலமுமாய் இவளும் ராஜஷேகறும் சிறப்புப்போட்டொ எடுத்துக்கொண்டார்கள். னிகழ்ச்சிமுடிந்து கீழேவர, மலையாளிகள் பலரும் சூழ்ந்து கொள்ள அந்த அன்புமழையில் திக்குமுக்காடிப்போக, வாரியர் ஓடிவந்தார்,
தொலிபேசியை காதில் பொருத்திக்கொடுத்தார். கணவர்?------ மகிழ்ச்சியை அப்படியே இவள் கொட்டினாள். so, விஜயிச்சு அல்லெ, எந்தா சன்மானம்? என கணவர் கேட்க, மகள் அம்மா, என பேசிமுடித்தபிறகு விடுக்கென்று போன் பிடுங்கப்பட்டது
வாரியர் காணாமல் போனார். தோழிகள் நெஞ்சோடணைத்து பாராட்டினார்கள், அறிமுகமில்லாத பலரும் அருகே வந்து பாராட்ட அன்புமழையில் நனைந்து அவள் மனமெல்லாம் ஈரமாகிப்போனது.

அடுத்த அரைமணினேரத்தில் இவர்களுக்கான இரவு விருந்து சிறப்புவிருந்து, அவசர்ம் அவசரமாய் குளித்து புறப்பட, ரெஷ்மி கேலி செய்தாள். 2 கைகளிலும் எட்டெட்டு ஸ்வர்ண வள, கழுத்தில் நீண்ட பாலக்கா {10 பவன்} மால, 4 மோதிரங்கள், அடடா, நகைகடை வைக்கலாம் போலிருக்கிறதே, என்று இவள் நகைகளை தொட்டுப்பார்த்து, கமெண்ட் அடிக்க இவள் பதில் பேசவில்லை. விருந்து ஹாலினுள் நுழைந்தால், நிகழ்ச்சியாளர்களோடும் சகபடைப்பாளர்களோடும், அரங்கில் சந்தித்த மணிவண்ணன், ரூபன், தயாளினி, வானதி, முருகரட்னம்என்ற இளையரும் கூட அங்கு காணப்பட மகிழ்வாக இருந்தது,
மதியமே இவள் டென்ஷனில் ஒழுங்காக சாப்பிடவில்லை, ஆனால் இப்பொழுது உண்மையிலேயே பசி தாகம் எல்லாமே கிட்டெ வந்து குசலம் விசாரிக்க, ஒரு கப் சாய வார்த்துக்கொண்டாள். தயிர் சாதம் ஒருகப்பில் போட்டுக்கொண்டாள்
dr. lingkappaa, மாலினியோடு படு அமர்க்களமாய் நுழைந்தார், கச்சேரி களை கட்டியது,
so, னிறைய ரசிகர்கள் போலிருக்கிறதே, ஹ்ம்ம், பெரிய ஆளாகிவிட்டீர்கள், என்றபோது, dr. maartin, அழைக்க லிங்கப்பா காணாமல் போனார்.
விருந்து தொடங்கிய சில னிமிஷத்தில் இளையர்கள் புதிய கேம்ஸ் ஏதாவது தொடங்கலாமா என்க்கேட்க அறிவுஜீவிகள் எல்லோருமே என்னவென்றே புரியாமல், ஒரு சேஞ்சுக்காக சம்மதிக்க, சீட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது, யார் எடுக்கிறார்களோ, அவர் அதை செய்துகாட்டவேண்டும், முதலில் மாட்டியவர், க்ரிஷ்னன்குட்டி, பாடவேண்டும், . ஒருனிமிடம் எதுவுமே புரியாமல், திடுக்கென்று, பள்லளிக்கட்டு சபரிமலைக்கு,
கள்ளும் முள்லும் காலுக்கு மெத்தை, என்று பாட சிரிப்பில் அதிர்ந்தது சூழல், அடுத்து ட்r. maartin, னாய்போல் குலைக்கவேண்டும், அவர் குலைக்க வயிறு வலித்தது சிரித்துச்சிரித்து,'
அதற்குமடுத்து, இவள், பிரித்துப்படித்தால், பாடவேண்டும் அல்லது ஆடவேண்டும், அய்யோ, சாமி, சகலமும் பதறியவளாய் வாசலை நோக்கி இவள் ஓட, ராஜஷேகரும், கல்யானிக்குட்டியும் பிடித்துக்கொண்டுவர, அம்மாடி, அம்மாடி,
no, no, saar, please, என இவள் பரிதவிக்க, come on பாப்பா ச்சா பாடுங்கள் 'என்று prof, ஜேக்கபும் சொல்ல திடுக்கிட்டுப்போய் நிமிர்ந்தால்
, இடிஇடியெனச்சிரித்தார் லிங்கப்பா. நோ பப்பாச்சா. ம ப ஸ, that is her romantic கோட்டிங்' என்றிட, இவளுக்கு வெட்கத்தில் உயிரே போனது.
ரெஷ்மி, க்ரிஷ்னன் குட்டி, எல்லோருமே கெஞ்ச, ராஜஷேகர் அவளுக்கு குளிர்கோட்டை கொண்டுவந்து மாட்ட, அந்த அன்பில் ஒருகணம் நிதர்சனம் பொலபொலக்க, அப்படியே நெஞ்சு விம்மியது. அந்த அன்புக்கு முன்னால் அவளது அனைத்து
மெளடீகங்களும் சுக்கல் சுக்கலாய் சிதறிவிழ, தானே மைக்கை எடுத்துக்கொண்டாள்,
கண்கள் வழிய வழிய, ஆனால் வெட்கமும் சிரிப்புமாய் அவள் பாடினாள்,
தமிழ்ப்பாடல், பழையபாடல், பள்ளினாட்களில் அவளை பெரிதும் கவர்ந்த ஒரு பாடல்,
'காதோடுதான் ஞான் பாடுவேன், மனதோடுதான் ஞான் பேசுவேன், விழியோடுதான் உறவாடுவேன்,'

{அடுத்த இதழில் முற்றும்}

No comments:

Post a Comment