Wednesday, September 23, 2015

சிங்கப்பூர் எழுத்துத்துறை: 50 ஆண்டு வளர்ச்சியின் ஒரு கண்ணோட்டம்





சிங்கப்பூர் தனது 50 ஆண்டு வளர்ச் சியைக் கொண்டாடும் பொன்விழா ஆண்டில் சிங்கப்பூரின் தமிழ் இலக் கியத் துறையின் வளர்ச்சி, அதன் நோக்கம், போக்கு முதலியவற்றை ஆராய விழைந்துள்ளது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம். சிங்கப்பூரின் தமிழ் எழுத்துத்துறை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் முயற்சியாக ‚‘50 ஆண்டு காலச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத் தின் நோக்கும் போக்கும்’ எனும் தலைப்பில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றுக்கு கழகம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

“சிங்கப்பூர் 50 ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் நாட்டுக்கு ஓர் அன்பளிப்பாக இருக்க வேண்டும் என்று கருதி கதை, கட் டுரை, நாடகம், கவிதை என நான்கு பிரிவுகளின் வளர்ச்சியைப் பற்றி ஒரு கருத்தரங்கிற்கும் உள்ளூர் படைப்பாளி களின் படைப்புகளைக் கொண்ட இரு நூல்களையும் வெளியிட முடிவு செய் தோம்,” என்றார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளார் திரு சுப. அருணாசலம். “சிங்கப்பூரின் 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றை எடுத்துரைக்கும் இந்த இரு நூல்களை சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துறையின் ஆவணமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் அவர்.


நன்றி - தமிழ் முரசு - சிங்கை


No comments:

Post a Comment