Sunday, July 26, 2015

கதை சொல்லும் ஆசிரியர்கள்


பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர், இசை ஆசிரியர், யோகா கற்றுதருபவர் போல கதை சொல்லி ஆசிரியர்கள் ஏன் இல்லை என்று நான் நினைப்பதுண்டு தப்பித்தவறி ஒர் ஆசிரியர் பாடத்தை ஒதுக்கிவிட்டு சொன்ன கதைகளின் ஊக்கம்தானே இப்போது நம்மை கதை சோல்ல வைத்திருக்கிறது .கதை என்பதை வெறும் கற்பனையா என்ன? கதை என்பது நமது ஞாபகங்களின் சேமிப்புக்கூடம், மரபின் தொடர்ச்சி, கதைகள் நம் சமூகத்தின் மனசாட்சியல்லவா!
இந்த உலகில் எவ்வளவு மனிதர்கள் வாழ்கிறார்களோ, அவ்வளவு கதைகள் இருக்கின்றன, கடற்கரை மணல்துகள்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகம் என்பார்கள்.இன்று நடை பெற்ற சிங்கப்பூர் கல்வி அமைச்சின் Creative Writing Competition (for Secondary TL pupils. நடுவராக போட்டிக்கு வந்திருந்த மாணவர்களின் கதைகளை பரிசீலித்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஒரு புள்ளியில் ஒருங்கிணைவோடு குவியக்கூடிய சிறுகதை கள் வடிவ நேர்த்தியுடன் பல அடுக்குகள் கொண்ட கதைகள் குறியீட்டுத்தன்மை கொண்ட கதைகள் திருப்புமுனைப்புள்ளியில் மட்டும் உச்சம் தொட்ட கதைகள் மாய யதார்த்தக் கதைகள் .சிங்கப்பூர் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் அசரடித்து விட்டார்கள் .
உண்மையில் சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் கதை சொல்லி ஆசிரியர்களை தனியாக நியமித்து விட்டார்களா? ஒவ்வொரு மாணவ மாணவிகளின் படைப்புக்களையும் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களிடம் கொண்டாடி சிலாகித்து மகிழ்ந்தது கண் கொள்ளாக்காட்சி ...அத்தோடு என் மூன்றாவது கை சிறுகதைத் தொகுப்பை கியூவில் நின்று பணம் கொடுத்து வாங்கிச்சென்றது
என்னத்தை சொல்ல .. வாழ்க கதை சொல்லி ஆசிரியர்கள்
— with Kamalam Devi and Rosyid Ali.

1 comment:

  1. வணக்கம்

    திறமையான ஆக்கங்கள் முதலிடம் வருவது உண்மை... அதைப்போன்றுதான்... தங்களனி் சிறுகதையும். வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete