Thursday, June 30, 2011

கிரசண்ட் பெண்கள் பள்ளியில் சிறுகதைப்பயிற்சி


சிங்கையின் முன்னணி எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன், கிரசண்ட் பெண்கள் பள்ளியில் நடத்திய சிறுகதைப்பயிலரங்கில் மாணவிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். சுவைபட எழுத்தாளர் நடத்திய பயிலரங்கில் அறிவார்த்தமாகவும், ஆர்வத்தோடும் மாணவிகள் கேள்வி கேட்டு திகைக்க வைத்தார்கள்.பிறகு எழுத்தாளர் கொடுத்த பயிற்சியில் சிறப்பாக எழுதிய மாணவிகளுக்கு, திருமதி. கமலாதேவி அவர்கள் சிறு பரிசுப்பொருளும் கொடுத்து மகிழ்ந்தார்.
ஆசிரியைகள், திருமதி ஷாமினி, டாக்டர் உமா, திருவாளர்கள் மோஹன், மூர்த்தி, என ஆசிரியர்களும் கூட கலந்துகொண்டு, கலந்துரையாடல்களில் தங்கள் கருத்துரைகளை பகிர்ந்து கொண்டது மிகவும் நிறைவாக இருந்தது, என்றும் தமிழில் இப்படிப்பட்ட மாணவிகளை சந்திப்பது, சிங்கப்பூர் இலக்கியத்துக்கு , வருங்காலத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பைத்தருகிறது, என நிறைவோடு சொல்கிறார் எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தன்.

நன்றி-தமிழ்முரசு--30-6-2011

1 comment:

  1. பாராட்டுகள் அம்மா

    தேவ்

    ReplyDelete