Friday, April 30, 2010

மந்திரம் சொன்னேன், வந்து விடு - 2

மந்திரம் சொன்னேன், வந்து விடு??? - 2

வானமே பொத்துக்கொண்டு வழிவதுபோல், அந்தக்கொடும் மழையில், நிற்கவே பயமாக இருந்தது. மிகவும் பயமாக இருந்தது, எந்த சபிக்கப்பட்ட நிமிஷத்தில் இவளுக்கு இப்படியொரு ரோஷம் பிறந்ததோ, என்று தன்னையே சபித்துக்கொள்ளக்கூட சக்தியில்லை.ஆனால் அத்தனை பயத்திலும், சதா நாவிலிருக்கும் மந்திரம் ஜெபிக்க மட்டும் நா பிழறவேயில்லை.கொட்டும் மழையில் கிடுகிடுக்கும் குளிரில் நடக்கக்கூட முடியவில்லை..புடவை தடுக்கத் தடுக்க, சற்று தூரத்தில் தெரிந்த அந்தபேக்டரிக்கு முன்னால் எப்படியோ போய்ச்சேர்ந்தபோது,பேயாய் மழை முகத்தில் அறைந்து தள்ளியது.
கேட்டைப்பிடித்து ஆட்டலாமா என்று இவள் யோசிக்குமுன்னே, ஒரு மனித உருவம் மழைக்கோட்டுடன் ஓடிவருவது தெரிந்தது.
யெஸ் என்று கேட்டதுதான் தாமதம், No, No,No tears, please, don,t cry, don, t cry,என்று அந்த சீன வயதான செக்யூரிட்டி ஆபீசர்,சொல்லச் சொல்ல, me, i lost my way, i want to call my husband, i want to, ----i want to, ----அதற்குமேல் அவளால் பேசவே முடியவில்லை.

மழைநீர் உடலைப் பிழியப் பிழிய, மனசும் துக்கத்தில்,பிழியப் பிழிய , அதற்குமேல் ,அழக்கூட தெம்பில்லாமல் கிடுகிடுத்துப்போய்இவள் நிற்கவே தடுமாற, அந்த செக்யூரிட்டி ஆபிசர்,அலுவலக அறைக்குள் அவளை அழைத்துப்போய் உட்கார்த்தி வைத்துவிட்டு, பெரிய டவல் ஒன்றை அவளிடம் எடுத்துவந்து நீட்டினார். பேக்டரி அதிகாரிக்கு தகவல் சொல்லிவிட்டு, அருகிலிருந்த மெஷினில் காசு போட்டு, ஒரு கப் காப்பியை எடுத்துவந்து அவளிடம் நீட்ட ,சாக்‌ஷாத் ஈஷ்வரனே அவளுக்கு முன்னால் ப்ரத்யட்சப்பட்டதுபோல் , கையெடுத்து கும்பிடத்தோன்றியது.
அதற்குள் அதிகாரிகள் இருவர் [இருவருமே சீனர்கள் தான்] வர, பேசவே சக்தியற்று, இவள் பேனாவால் எழுதிக் காட்டினாள்.
எழுதும்போதே தலை சுற்றிக்கொண்டு வந்தது, காப்பியே வேண்டியிருக்கலை.சூடாய் வெந்நீர் கொண்டுவர, ஏனோ அதையும் குடிக்கமுடியவில்லை, ஆனால் அவர்கள் வற்புறுத்த 2 மிடறு குடிக்க, மீண்டும் தலையை சுற்றிக்கொண்டு வந்தது.

முகவரியும் தொலைபேசி எண்ணும் எழுதிக்கொடுத்தது நினைவிருக்கிறது.
கண் விழித்தபோது கையில் ட்ரிப்ஸ் ஏற, அவள் வீட்டிற்கு அருகே உள்ள பிரைவேட் க்லினிக்கில் இருந்தாள், மருத்துவரோடு பேசிகொண்டு நின்ற கணவரைப் பார்க்கவே பயமாக இருந்தது. மன்னிப்புக்கேட்கக் கூட தைரியமில்லாமல், மெல்ல கண்களைத் திறந்தபோது, அருகே வந்த கணவர் பேசவில்லை., இன்னும் ஒரு மணிநேரத்தில், ட்ரிப்சை எடுத்துவிடலாம்,
பிறகு வீட்டுக்குப்போகலாம்”என்று மருத்துவர் கூற, பிறகுதான் கணவர் அருகே வந்தார். எப்படியெல்லாம் திட்டப்போகிறாரோ, என்று பயத்தில் பேச்சிழந்திருந்த இவளிடம் கணவர் முதன்முதலாக வாய் திறந்தார், இதோ பார்,பூலோகத்திலேயே நின்னைப்போல் அதிவீர புத்திசாலி யாருமே இல்லை என்பதை ஞான் இப்பொழுது ஒத்துக்கொள்கிறேன். என்ன, போதுமா? இனி, இனி ஒருபோதும்,, ””---என்று சொல்லும்போதே கணவரின் குரலும் லேசாக நடுங்க, ,
”ஹா, கணவர் திட்டவே இல்லையே,, இந்த முறை என்னை மன்னித்துவிட்டாரா??
சந்தனக்க்காற்றே, செந்தமிழ் ஊற்றே, , சந்தோஷப்பாட்டே வா வா, என்ற பாட்டு ரீங்கரிக்க, சந்தோஷத்தில் ஒரு கணம் , சகலமும் மறந்தவளாய், பரவசத்தில் ,அப்படியே அவரது இருகரங்களையும் பற்றிக்கொண்டு, முச், சென்று ஒரு முத்தம் கொடுக்க, நீ திருந்தவே மாட்டாயா? என்று கணவர் லேசாய் சிரிக்க,, தக்‌ஷணம் கணவர் மீது தோன்றிய அபரிதமான காதலை எழுத , ஞான், ஞான்,
தமிழில் வார்த்தைகளைத் தேடுகிறேன்.

[முற்றும்]

[சாஹித்ய கமலம்--மலையாளத்தொடருக்காக]

No comments:

Post a Comment