Monday, September 28, 2009

All literatures are morals: Morals are not literatures

All literatures are morals: Morals are not literature ---- Oscar Wilde

இலக்கியம் படைத்தல் என்பது, படைப்பாளன் தன் உள்ளொளியைத் தேடும் தேடல் மட்டும்தானா?அல்லது சமுதாய சிந்தனையும், சமூகப் பிரக்ஞையை அலசுவதும் மட்டுமே தானா இலக்கியம்?
No,No, my dear friends.!.இலக்கியம் வழி ஞான் பயணிக்கும்போது , எமது அகமும் புறமும் நோக்கிய கற்பனைரூபம், நிஜரூபமாக வாக்கியப்படிமங்களில், வடிவம் பெறும்போதுதான்,எமது கலையின் மீட்சி , தகதகக்கும் செப்புப்பட்டயமாய்,
என்னுள் நிறைவுபெறுகிறது. இந்த தரிசனம் மிக சின்ன வயதிலேயே, எனக்குக் கிட்டிய அனுபவம் கூட, ஒரு சுவையான நிகழ்வே. எந்த தமிழ் எழுத்தாளரைக்கேட்டாலும் , புதுமைப்பித்தன்,ஜெயகாந்தன், தி.ஜா, ல.ச.ரா.என இப்படித்தான் , அவர்கள் ஆதர்சத்தை
அடையாளம் காட்டுவார்கள். ஆனால் இவளுக்கு அந்த பாக்கியமே இல்லை.வீடெல்லாம் புத்தகங்கள் இறைந்து கிடக்கும்.

தமிழாசிரியர் மூலம் தான் அவரது பெரிய பெரிய சங்க இலக்கிய நூல்கள் எல்லாம் படிக்கக் கிடைத்துண்டு. ஆசை ஆசையாய் படித்துப்பார்ப்பாள். ஆனால் அவளுக்குத்தான் புரியாது.
ஆசிரியர் தெரிந்த வரை சொல்லிக் கொடுப்பார். [தொல்காப்பிய பொருளதிகாரம் , போன்ற அரிய நூல்களையெல்லாம் அந்த சின்ன வயதிலேயே ஆசிரியர் வாசிக்கத்தருவார்,பின் ஆசிரியர் தமிழ்நாட்டுக்குத் திரும்பிப்போகும்போது, அத்தனை [9] புத்தகங்களையும் அவளுக்கே கொடுத்துவிட்டுப்போனார்.]
வாராவாரம் கிட்டும் தமிழ் நேசன் மட்டுமே அவளுக்கிருந்த ஒரே தமிழ் பத்திரிகைத் தொடர்பு.
நேசன் சிறுவர் அரங்கில் 4 பக்க கட்டுரைகளும், கதைகளும், எழுதிக்கொண்டிருந்த கால கட்டத்தில், ஒரு நாள் ஞாயிறு பதிப்பில்
பிரசுரமாகிய ”சுழல் பந்து” எனும் ஒரு சிறுகதை--- மிகவும் கவர்ந்தது.ஒரு ஆசிரியருக்கும் மாணவனுக்குமிடையேயான சம்பவக் கோர்வையை,
கதையாக்கிய வடிவம். படித்து முடித்ததும் ஒரு நிமிஷம் அப்படியே மனசில் நிலைத்துவிட்டது.

a thin plot ! simple plot ! why not ? a common plot too !
ஆனாலும் அக்கதை அந்த 13 வயதுச்சிறுமியை அப்படி ஆக்ரமித்தது. சிறுகதைகளின் மூலம்
கட்டமைக்கக் கூடிய பெருமிதமே, நடப்பியல் அழகை வாசகனுக்கு அவனையறியாமலேயே ஊட்டுவதுதானே? classism, aestheticism,romanticism,realism, symbolism,என அனைத்துக் கோட்பாட்டுணர்வையும், அந்தந்த காலகட்டத்துக்கேற்ப,
எழுதப்படும்,கதைகள் மட்டும்தான் வெற்றி பெறுகிறதா, ?என்பதும் கூட இங்கு சிந்திக்கப்படல் வேண்டும்.
உத்தி, உள்ளீடு, இவற்றையும் தாண்டி உருவகம், இந்த சிறுகதையில் மிக அழகாக கொண்டு செல்லப்பட்டுள்ளதுகூட, அண்மையில் தான் கவனித்தாள். ஒரு இளம் ஆசிரியரின் மாணவ கோபத்தை,சலிப்பை, பிரச்சாரமற்ற எழுத்து நடையில்,சிறுகதைக்குரிய எல்லைக்கோடுகளை
தாண்டாமல், மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு ஆண்டுகட்குப்பின்னரும், இன்றும் படிக்கும்போதும் , இச்சிறுகதை, அப்படியொன்றும் நம்மை ஏமாற்றவில்லை. உலகின் மிகச்சிறந்த நாவல்களையெல்லாம் படித்து ஆய்விலக்கிய பார்வையில்
சிந்தித்ததுண்டு. உவமித்து எழுதும் வரிகளில் கூட இலக்கியம் தேடுபவள் ஞான் ,என்பது என்னை அறிந்தவர்கள் அறிவார்கள். அப்படியாயின் சுழல்பந்து சிறுகதை, எழுதிய கதாசிரியருக்கு இவ்வாரப்பூச்செண்டு கொடுப்பதில், எனக்கு மட்டுமா மகிழ்வு? அடடா? யாரிந்த சுழல் பந்து சார் என்று சொல்லவில்லையே?

வேறு யார்? மலேசியாவின் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்கள் தான்.
தமிழிலக்கியத்தில் எமது முதல் சிறுகதையாசிரியர் சுழல் பந்து சாருக்கு நமஸ்காரம்.

No comments:

Post a Comment