Friday, July 24, 2009

கூத்துப்பட்டறையில் - கருத்துக்கள்

அருமை கமலம். உங்களோடு நாங்களும் பயணித்தை அனுபவத்தைத் தந்துவிட்டீர்கள். பசுபதியைப் பற்றி முதலில் ஆரம்பிக்கும்போதே அந்தப் பசுபதிதான் இந்தப் பசுபதி என்று ஊகித்தேன். ஆனால் உங்கள்ள் எழுத்து மூலம் வரட்டும் என்று காத்திருந்தேன்.

அவ்வப்போது இத்தகைய நல்ல தொடர்களை எங்களுக்கும் தாருங்கள்.. அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது..

திவாகர்




கமலம் ,

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் ,திரைப்படம் போல் சித்தரிக்கும் தங்கள் ஆற்றல் என்னை பிரமிக்கவைக்கிறது .
எதையும் காட்ச்சியாகவே பார்த்து அவை பதிவு செய்து கொள்ளும் ஒரு அரிய முறை உங்களுக்கு கை வந்திருக்கிறது .
ஒருவித்தியாசமான அறிமுகம் .கூத்துப்பட்டறைக்கு தந்திருக்கிறீர்கள்
உடன் வாழ்ந்த நண்பர்களையும் என்றும் அழியாத பாத்திரங்களாக்கி விட்டீர்கள் .

முனைவர் கண்ணன் சொல்வது போல் உங்கள் நடை கொஞ்சும் சலங்கைதான் .
ஒரு சாஹித்யக்காரியின் படைப்பு இத்தனை விரைவில் முடிந்து விட்டது வருத்தமே வாழ்க !

அன்புடன்
ஏ சுகுமாரன்






சுகுமாரன்
அன்பான நிங்ஙளின் கருத்தாழத்துக்கு .நன்றி. பல ஆண்டுகளாகியும் எப்படி நினைவில் வைத்கூத்துப்பட்டறையில்திருக்க முடிகிறது , என்ற பலரின் கேள்விகட்கு எண்டெ பதில்,ஞான் எதையுமே மறக்கவே இல்லை. மறந்தால் தானே புதிதாக நினைப்பதற்கு.கூத்துப்பட்டறை மாணவர்களை எண்டெ சொந்த தம்பிகளாகவே நினைக்கிறேன் அதனால்தான் மொச்சைப்பற்கள் தெரிய , சேச்சி, என்றழைத்த பசுபதியின்
பேட்டியை , அண்மையில், மலையாள சேனல் ஏஷியா நெட்டில் , பார்த்தபோது, எனக்கு பிரமிப்பே இல்லை. என்ன? அன்றைய ஒல்லிக்குச்சி பசுபதி அல்ல.இன்று.
இக்கட்டுரை மலையாளத்திலும் வெளிவந்து சென்ற வாரம் தான் முற்றுப் பெற்றது.
அவர்களும் கூத்துப்பட்டறை மபற்றி, விசாரித்துள்லார்கள்.

அன்புக்கு நன்றி
கமலம்





அதுதானே.

எனக்கு மின்தமிழை அறிமுகப்படுத்தியவர்களில் நரசய்யா சாருக்கு அடுத்து வருபவர் கமலம் தம்புராட்டி. இந்தக் குழுமத்தில் ஒரு தனிஒளி கமலம் அவர்கள்.

அத்தனை வலு இல்லை என்றாலும் நானும் அவரைப் போக விடாமல் இழுத்து வைத்துக் கொள்ள முயற்சி்ப்பேன்.

கூத்துப்பட்டறைக்கு அடுத்து இன்னும் பல அற்புதமான அனுபவங்கள் உங்கள் கொஞ்சும் தமிழில் தொடரட்டும்.

என்ன, கொஞ்ச நாட்கள் கழித்து நாங்களும் பழக்க தோஷத்தில மலையாளம் கலந்து எழுதத் துவங்கி விடுவோம்.
அன்புடன்

பென்னேஸ்வரன்







அப்படிக் கொப்பரைத்தொட்டியை விளித்ததால்தானே ,
காசுமியின் அருமையான கவிதை இன்று கிட்டியுள்ளது.
தாயுமானவன், ரிஷான், சுகுமாரன், துரை, எனப் பலரின் கவிதைகளும் கூட
மனசுக்கு உவப்பூட்டுகிறது தான்.எல்லோருக்குமே வாழ்த்துகிறேன்.
பாடல் கேட்டேன். நன்றி.
கமலம்.
பி.கு-- போனாலும் அவ்வப்போது பூச்செண்டு கொடுக்க நிச்சயம் வருவேன்

.



அதெல்லாம் விடமுடியாது. நீங்கள் நினைத்தால் யார் யாரையோ கொப்பரைத்
தொட்டியில் போடுகிறீர்கள்! பிறகு இனிமேல் வரமுடியாது என்கிறீர்கள். என்ன
நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதெல்லாம் எங்கும் போகக்கூடாது.
மின்தமிழின் தம்பிராட்டி போல், வழக்கம் போல் வளைய, வளைய வந்து
கொண்டிருங்கள். கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு, நெஞ்சில் பொங்குதம்மா புதிய
பாட்டு!

க..

1 comment:

  1. அன்பின் சகோதரி,

    அனுபவங்கள், நினைவுகளில் நிறைந்திருந்தவற்றை மிக அருமையாகக் கோர்த்தெடுத்து, மின் தமிழில் நீங்கள் அளித்த கூத்துப்பட்டறைத் தொடர் மிகவும் அருமையாக இருந்தது. சுவாரஸ்யமான எழுத்துநடை. பாராட்டுக்கள் சகோதரி !

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்

    ReplyDelete