Wednesday, July 22, 2009

கூத்துப்பட்டறையுன் கருத்துக்கள்

கமலம்,

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்திருக்கிறேன்.

உங்கள் கூத்துப் பட்டறைத் தொடரை விட்டுவிட்டுத்தான் படித்தேன்.
பல்வேறு (சில்லறை) வேலைகள், பயணங்கள் இவற்றால் தவறவிட்டது
உண்டு.

மிகவும் சுவையான தொடர். இதில் முக்கியம் என்னவென்றால்
objectiveஆக எழுத வேண்டும் என்ற தொந்திரவு இல்லாமல்
subjectiveஆக உங்கள் அபிப்பிராயங்கள், உணர்வுகள் அனைத்தையும்
குழைத்து எழுதினீர்கள். தற்சார்பற்ற எழுத்து காய்ந்து கருவாடாகிப்
போகும் ஆபத்து உண்டு. உங்களை உள்ளே கரைத்துக் கொண்டு
எழுதும் எழுத்தே உயிர்ப்புடன் நிற்கும். உங்கள் எழுத்து அப்படிப்
பட்டது. அதனால்தான் சுவை. அதனால்தான் ஈர்ப்பு. எத்தனை பேரை
ஈர்த்துக் கட்டப் போட்டிருக்கிறீர்கள் பாருங்கள்!

நம் வாழ்வில் முக்கிய கணங்களை எல்லாம் இப்ப்டி எழுதி வைத்து
நம் சகோதரர்களுக்கு மட்டுமின்றி நம் பிற்காலச் சந்திதியனருக்குக் கூட
விட்டுச் செல்வது நல்ல காரியம்.
அப்படியான அன்பு வலை விரிப்புத்தான் உங்களுடையதும். படிக்கப் படிக்க
எல்லாருக்கும் அணுக்கமான சேச்சி ஆகிவிடுகிறீர்கள். (படிப்பவர்களில்
பாதிப்
பேர் உங்களுக்குச் சேட்டனாகும் வயதுடையவர்கள் என்பதைச் சொல்லி
கெடுக்க வேண்டாம் என நினைக்கிறேன்.) முத்துசாமியையும் பசுபதியையும்
இன்னும் பலரையும் எங்களுக்குப் பக்கத்தில் கொண்டுவந்து விடுகிறீர்கள்.

பலாப் பாயசம் போன்ற அருமையான தொடரை வழங்கியமைக்கு நன்றி.

ரெ.கா.பதில் :-
சுழல் பந்து சார்,
நிங்ஙளின் feedback கோணோமே என்று மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.
தமிழில் சுழல் பந்து சிறுகதைதானே எண்டெ முதல் இலக்கிய வாசல், [எண்டெ அனைத்துப்பேட்டிகளிலும் கூட
இதை சொல்லியிருக்கிறேன்]
பலப்பாயசம்[சக்கப்ரப்தமன்] குடித்த நிறைவு நிங்ஙளுக்கு மட்டுமல்ல,
எனக்கும் தான். நன்றி சுழல் பந்து சார்.
மணியம் இதை நுலாகக் கொண்டு வரவேண்டும், வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல நாடக ஆவணமாக இருக்குமே என்றார் நேற்று.
யோசிப்போம்.
கமலம்கமலம் அம்மா,
ரம்மியமான சுகமான சாகித்யத்தை (இங்கே அது சங்கீதம் என்று பொருள் படும்) மலையாளத்திலும் அப்படித்தானோ? தந்து எங்களை வசியப் படுத்திவிட்டீர்கள். தமிழில், மலையாளத் தமிழ் என்ற புதினத்தை வாசிக்க எங்களுக்கு வாய்ப்பளித்தீர்கள். உண்மையில், கல்வெட்டு வகுப்புகளுக்குப் பின், தெரிந்த உண்மை என்ன தெரியுமா? இன்னும் பல புராணத் தமிழ் வார்த்தைகள், எழுத்து வடிவங்கள் மலையாளத்தில்தான் இன்றும் உபயோகிக்கிறார்கள் என்பது! கூத்துப் பட்டறையில் சேர உங்களது அறிமுகக் கடிதம் வேண்டும். சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையைக் கிளறிவிட்டீர்கள்!
சந்திரா
நிங்ஙள் எந்நுகூடியும் நிங்ஙள்டெ எழுத்த விடாம்பாடில்லா;
அதாண ஞான் ப்ரத்யேகமாயிட்டுப் பறயுந்நது.
மநஸிலாயோ ?

தேவ்From: Geetha Sambasivam

Sent: Saturday, June 27, 2009 5:11:02 PM


வாழ்த்துகள் கமலம், அருமையான நினைவோட்டங்களுக்கும், அதைப் பதிந்ததுக்கும், பகிர்ந்ததுக்கும் வாழ்த்துகள். புதிய கதைத் தொடர்களிலும் வெற்றி காண வாழ்த்துகள்.

2009/6/27 v.dotthusg

ஓம்.
கைக்கருவியாகக் கேமராவும், ஒலிக்கருவியை மனத்திலும் கொண்டு அனைத்து நண்பர்களையும் கண்டு மகிழ்ந்து, அவர்களின் தோற்றம், அந்த படிமம் உள்ளத்தில் எப்படிப் பதிவை ஏற்படுத்தியது என்பதையும் ஒன்றுவிடாமல் எப்படித்தான் தொகுத்தளிக்கமுடிகிறதோ? அவர்களுடன் பேசிய விதமும் அவை உள்ளத்தில் புகுந்த விதமும், அவற்றிற்கான விளைவாகக் கூறிய பதில்களும் தணிக்கைசெய்யப்படாத நளின நடையில் அமைந்திருப்பது ஒரு அற்புதம்.
ஆசிகள் அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.From: annamalai sugumaran
Date: 6/27/2009 7:19:34 AM
கமலம் ,

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் ,திரைப்படம் போல் சித்தரிக்கும் தங்கள் ஆற்றல் என்னை பிரமிக்கவைக்கிறது .
எதையும் காட்ச்சியாகவே பார்த்து அவை பதிவு செய்து கொள்ளும் ஒரு அரிய முறை உங்களுக்கு கை வந்திருக்கிறது .
ஒருவித்தியாசமான அறிமுகம் .கூத்துப்பட்டறைக்கு தந்திருக்கிறீர்கள்
உடன் வாழ்ந்த நண்பர்களையும் என்றும் அழியாத பாத்திரங்களாக்கி விட்டீர்கள் .

முனைவர் கண்ணன் சொல்வது போல் உங்கள் நடை கொஞ்சும் சலங்கைதான் .
ஒரு சாஹித்யக்காரியின் படைப்பு இத்தனை விரைவில் முடிந்து விட்டது வருத்தமே ! வாழ்க !

அன்புடன்
ஏ சுகுமாரன்No comments:

Post a Comment