Saturday, November 15, 2008

Come on dear, tell me who is your major poet in literature?

திவசமொரு கவிதை எழுதான் பரயுன்ன மனசு,
திவசம் பறையான் எந்துண்டு என்ன சோத்யம் மற்ரொரு வஷத்து,
ஒன்னுமே சங்ஙதியில்லென்னு பரயுன்ன சன்யாசியுடெயும் விஸ்வசிக்கண்டா
சங்ஙதியில்லாண்ட ஜீவிதமில்லா.
இல்லென்னு பரஞ்ஞாலும் உண்டென்னுள்ளதே அவிடெ சங்ஙதி

(இலக்கியமே, யாரிங்கே மஹாகவி, பேதை எனக்கு சொல்ல வாயேன், --please}


கேள்வி--- சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, என படைப்பிலக்கியத்தில் கவிதைதான் சிறப்பு என்கிறீர்களா?
ப்தில்---- அப்படி ஞான் நினைத்ததேயில்லை. 13 வயதுப்பள்ளி மாணவியாக முதலில் ஞான் கவிதையில் தான் அறிமுகமானேன்.அதுவும் மலாய்மொழியில், {இன்று ஒரு இலக்கியாவாதியாகாவிடில் நிச்சயம் ஞான் ஒரு மலாய்மொழி ஆசிரியையாகியிருப்பேன்.} தமிழ் மலையாளம், எல்லாமே, பின்னர் எழுதத்தொடங்கிய அனுபவம். கவிதை எழுதுவதென்பது ஸ்வாஸத்திண்டெ ரீங்காரம்,.கவிதை எழுதும்போதே மனது
லகுவாகிவிடும் .என்னைபொறுத்தமட்டில் கவிதை என்பது உணர்வுகளின் முக்குளிப்பு.
கேள்வி--புதுக்கவிதையில் யாப்பிலக்கணங்களை கடைபிடிப்பதேயில்லை என்ற குறறச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்--- இதை அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.தொல்காப்பியமே யாப்புக்கு கட்டுப்படாத சொற்சீரடி பற்றிப்பேசுகிறது
{சான்று--- சங்க இலக்கியத்தில் செய்யுள்----ஆசிரியர்-புலவர் கதிர்காமறன்} இதுதான் புதுக்கவிதைக்கு ஆதாரமும் கூட. ஆனால் அதற்காக தடியெடுத்தவனெல்லாம் தண்டல் என்பதுபோல் பலரும் இன்று வார்த்தை விளையாட்டு விளையாடுவதால் புதுக்கவிதையின் அழகினை
நம்மில் பலர் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.. தரமான கவிஞனுக்கு எதுகை, மோனை, யாப்பிலக்கணம்,சந்தம், பாடுபொருள், ஓசை நயம் பற்றிய முறையான அறிவு வேண்டும், பலராலும் புதுக்கவிதை எழுதமுடியும் ஆனால் எத்தனை பேரால் மரபுக்கவிதை எழுத முடியும்? மரபுக்கவிதைக்கு நிரம்ப உழைப்பு தேவை, அதேதருணம் புதுக்கவிதையிலும் அற்புதமான கவிதைகள் வந்துள்ளது.கவிக்கோ, வைரமுத்து, பழனிபாரதி,கலாப்ரியா,
ப்ரமீல், நகுலன், தவிர ,இணையக்கவிஞ்ர்கள் ஜெர்மனிகண்ணன், ஹரிக்ரிஷ்ணன்,ராம,கி போன்றவர்களின் உரை வீச்சு என்னை ப்ரம்மிக்க வைக்ககிறது.
கேள்வி---சிறுகதையும் நாவலும் இன்று மேற்கத்திய இலக்கியங்களுக்கு முன்னால் தேங்கிய நிலையிலிருப்பதாகவே நினைக்கிறோம், உண்மைதானே?
ப்தில்---- இதைவிட அபத்தமான முறையீடில்லை என்றே நினைக்கிறேன், தி,ஜா,வும், ல.ச. ராவின் புத்தகங்களை இன்றும் மலையாளத்தில் பெருமையாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். னா.கோவிந்தசாமியின் திசைகள்,சு,ரா,வின் புளியமரத்தின்கதை, ப்ரபஞ்சனின், எம்,வி.வெங்கட் ராமனின்,ராஜம்க்ரிஷ்னனின்,. நீல, பத்மனாபனின், ராஜனாராயணனின்,பொன்னீலனின், மேலாண்மைபொன்னுசாமியின் , ஏன், யாருமே செய்திடாத, தலீத்திய வாழ்க்கையை
அப்பட்டமாக எழுதிய சிவகாமியின்(பழையன் கழிதலும்) அருமையான கதைகள் தமிழில் வெளிவந்துள்ளனவே? எத்தனை அற்புதமான படைப்பாளிகள் தமிழில் உள்ளனர்? முறையாக படித்தபின்னர், மதிப்பீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்
கேள்வி--- நாவலும் சிறுகதையும் கவிதையும் எழுதுவதற்கும் நாடக எழுத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில்----ஞான் நாடகாசிரியரானதே விபத்து.எண்டெ சிறுகதைகளும் தொடர்கதைகளும் பத்திரிகையில் வெளிவந்த கட்டத்தில் வானொலியிலிருந்து நாடகம் கேட்டு அழைப்பு வந்தது. வானொலியில் எண்டெ நாடகங்கள் ப்ரபலமாகியகட்டத்தில் மலையாளிகளிடையே பெரும் கண்டணமெழுந்தது. மலையாளியாகப்பிறந்து தமிழில் சாஹித்யமா என்று? மலையாளமும் எழுதவரும் என நிரூபிக்க ஒரு மலயாள நாடகம் எழுதி அமைப்புக்கு அனுப்பினேன்.அது பலராலும் பேசப்பட்டது சிங்கையின் அனைத்து அமைப்புகளும் எண்டெ நாடகத்தை விரும்பி ஏற்றபோது, எண்டெ ஸ்க்ரிப்டை ஞானே இயக்குமாறு கணவர் கொடுத்த ஊக்கம் ஞான் இயக்குனுருமானேன்{இன்று மேடை நாடகத்துறை
யை விட்டுமுற்றாக விலகிவிட்டாலும்,] வானொலிக்கு எழுதிக்கொண்டுதானிருக்கிறேன்
.சிறுகதையும் நாவலும் உரைனடை இலக்கியம், நாடகம் என்பது முற்றி¢லும் மாறுபட்ட project.
கவிதை , கவிதை, கவிதையே ஆலாபனைதான் ,அதிசயங்களின் மகோன்னத முகிழ்வு,.கவிதை எழுதும்போது ஞான் அழுதுள்ளேன்,
பாரதிக்கவிதைகளில் இன்னமும் இதிகாசத்தை காண்பவள் ஞான், புரிந்துகொள்ளுங்கள்.please,------
கேள்வி--மலையாள இலக்கியத்தில் பெற்ற இந்த சாதனைகள் , தமிழிலும் செய்திருக்கிறீர்களா?
பதில்--- ஞான் தமிழ் படித்ததே என்னைப்பொருத்தமட்டில் சாதனை தான். தீவிர மொழிப்பற்றாளருக்கு மகளாகப்பிறந்த ஞான் முற்றி¢லும் கேரளச்சூழலிலேயே வளர்ந்தவள் . தமிழ் படிக்க தீயில் நடந்திருக்கிறேன், அக்னியில் னின்று தமிழிலக்கியம் படைக்க வந்தவள் .
பரிசுகோப்பைகள் சான்றிதழ்கள் எல்லா ரொம்ப சின்ன வயதிலிருந்தே தமிழில் பெற்றுள்ளேன் ஆனாலும்
பரிசுகளும் விருதுகளும் தான் ஒரு படைப்பாளியின் முத்திரை என்று ஞான் நம்பவில்லை.

கேல்வி---நவீன நாடகத்தில் தான் அறிவுஜீவித்தனம் பளிச்சிடுகிறது என்பது பற்றி------
பதில்----- இந்த் வீச்சையே மிக வன்மையாக ஆட்சேபிக்கிறேன். காதல், குடும்பம், சமூகவியல் பற்றி எழுதினாலே சும்மா, அதிரடி சாகஸங்களும் தடாலடி உத்திகளை காட்டினால் தான் அறிவுஜீவித்தனம் எனும் அலட்டல் வெறும் பம்மாத்து வசனமே.
முத்துசாமியின் நாற்காலிக்காரர், ஜி. சங்கரப்பிள்ளையின் மூதேவித்தொய்யம், போன்ற படைப்புகளை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள
வேமுடியவில்லை, முத்துசாமி சாரின் நாடகத்தை விட அவரது சிறுகதையை கலையழகோடு ரசிக்கமுடிகிறது.
துர்கிர அவலம் ,prof. ராமானுஜம் ஸாரின் வெறியாட்டம், அல்காசியின் ரசியா சுல்தான், காவாலம் பணிக்கரின் மத்த விலாசப்ரகசனம்.
பெற்றோல்ட் ப்ரக்டுவின் மனிதனுக்குச்சமம் மனிதன், போற நாடங்கள் யோசிக்க வைத்தவை.
முழுக்க முழுக்க மேற்கத்திய தழுவலில், அதன் தாக்கத்தில் நம்மவர் படைப்பது சமயத்தில் ரசிக்கமுடியவில்லை.
ஷேக்ஸ்பியரின் ஒதேல்லோ, தந்த நிறைவு கூட அதன் இயக்கமே.
கேள்வி-- அம்மா, மலையாள இலக்கியத்துக்கும் தமிழுக்குமுள்ள நிறை குறை என்று எதைக்கூறுவீர்கள்?
பதில்---- தமிழ் காவ்யம், தமிழ் ஈஷ்வரி, தமிழில் கிட்டிய மிகப்பெரும் வரமல்லவா பாரதி, அந்த தமிழை எழுதும்போது எண்டெ நிறைவை
எழுத்தில் வடிக்க இயலாது. வணங்க மட்டுமே முடியும்
. மலையாளம் ஸ்வப்னமொழி, அற்புதமான மொழி, தமிழில் இயலாத பல நுட்பமான படிமங்களை மலையாளத்தில் கதாசிரியர்கள் எழுதுகிறார்கள். யதார்த்த இலக்கியம், அருமையாக வாசகர்களால் ஏற்றுக்கொள்ளபடுகிறது எனக்கு 2 மொழியிலும் நிறைவே .
etc,---------------------
இப்படிபலதரப்பட்ட கேள்விகளும் பதிலுமாக ஒரு வழியாக , நன்றிகூறி விடைபெறும்போது,அழகிய மயில் பதித்த குமிழை அவ்ர்கள் பரிசளிக்க
பெற்றுக்கொண்டு, வெளியே வர, தோழியர் அருகே வர, Dr. lingkappaa வும் அருகே வந்தார்.
கை கொடுத்தார்,' so, பாரதிதான் தமிழா,' என்று அவர் மலையாளத்தில் கேட்க, வியந்துபோனாள்,
ஸார், நிங்ஙள் தமிழரா?' என்று இவள் கேட்க, I am sorry I am an indian, ' என்று சிடுக்கென்று பதில் கூறிவிட்டு போய்விட்டார். அப்படியே , ---அப்படியே,--- இந்த ஜென்மத்தில் இந்த மூஞ்சியிடம் பேசுவதில்லை என்று கோபம் பற்றி எழ, ----
ஹ்ம்ம்ம்ம், அவர் யாரென்றே இவளுக்கு தெரியாததால், --- -----------?

{தொடரும்}

No comments:

Post a Comment